Wednesday, August 05, 2009

திரு. அறிவுமதியின் கவிதையை வெண்பாவாக்கும் முயற்சி

நெருப்பேற்ற பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ்
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை
நெஞ்சத்தான் செய்த வினை.

குறள் வடிவில்

நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.

பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்
அழிக்கும் விழலாய் விரைந்து.

7 comments:

  1. புதுகவிதைகளை மரபு கவிதைகளாக மாற்றும் முயற்சி வளர்க.
    அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. வெண்பா வடிவிலும்
    குறள் வடிவிலும்
    அற்புதம் படைத்துள்ளீர்கள்

    வாழ்த்துகள்

    அன்புடன்
    திகழ்

    ReplyDelete
  3. கலக்கல். அருமையோ அருமை தோழி.
    --வித்யா

    ReplyDelete
  4. மிக்க நன்றி சொல்லரசன். உங்கள் ஊக்கம் தான் என்னை எவ்வளவு எழுத வைக்கிறது. நன்றி.
    அன்புடன் உமா.

    ReplyDelete
  5. திரு.திகழ். மிக்க நன்றி.
    அன்புடன் உமா.

    ReplyDelete
  6. தோழி வித்யா, மிக்க நன்றி.[அப்பம் மிக நன்றாக வந்தது. அதற்கு தனியாக நன்றி. உங்கள் பதிவிற்கு வந்து பின்னூட்டமிடுகிறேன்.]
    அன்புடன் உமா.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் நல்லாயிருக்கு

    ReplyDelete