Sunday, September 06, 2009

கற்றவர் வாரீர். - [ ஆசிரியப்பா ]

எடுமின் வாளை இடுமின் முழக்கம்
கடுங்கதிர் வெய்யோன் காரிருள் தன்னைக்
கெடுத்திடல் கண்டோம், பொறுத்திடல் வேண்டா
சிற்றெரும்பும் யானையைச் சினத்தொடு கொல்லும்.
கற்றவர் வாரீர் கல்லாமை இருளை
இல்லாது அழிப்போம், கல்வி
கல்லாதார் இல்லாத காலம் கனியவே.

7 comments:

ஆ.ஞானசேகரன் said...

//கற்றவர் வாரீர் கல்லாமை இருளை
இல்லாது அழிப்போம், கல்வி
கல்லாதார் இல்லாத காலம் கனியவே.//

அருமையும் அழகும்....

தேவன் மாயம் said...

கற்றவர் வந்தோம், ஆனால் ஆசிரியப்பா தெரியாதே!!

Jerry Eshananda said...

சார், என்னத்தான் கூப்பிடீங்களா?.

தேவன் மாயம் said...

ஓட்டும் போட்டாச்சு!

உமா said...

நன்றி ஞானசேகரன்.

மருத்துவரே, கவலையே வேண்டாம், அகரம் அமுதா தன் வெண்பா எழுதலாம் வாங்க வலையில் மிக எளிமையாக கற்றுத்தருகிறார். நீங்களோ மிகவும் சுவாரஸ்யமாக எழுதுகிறவர். உங்களுக்கு ஒன்றும் இது கடினமாக இருக்காது. திரு.ஞானசேகரனும் இதில் முயற்சி செய்தால் கண்டிப்பாக முடியும். இலக்கணம் பற்றியெல்லாம் கவலையில்லை,எளிதாக கற்கலாம்.

ஓட்டு போட்டதுக்கு ரொம்ப நன்றி தேவன் மாயம் அவர்களே. [என்ன உங்க ஓட்டுமட்டும் தான் அங்கே விழுந்திருக்கும்???]

ஜெரி ஈசானந்தா. கண்டிப்பாக, நீங்கலெல்லாம் நினைத்தால் எதுவும்செய்யலாம். முதல்வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

அகரம் அமுதா said...

வணக்கம் உமா அவர்களே! எனதாசான் பாத்தென்றல் முருகடியானிடம், அவருக்கான வாழ்த்தாகத் தாங்களும், அவனடியாரும் எழுதிய அகவற்பாவைப் படித்துக்காட்டினேன். நெஞ்சம் குளிர்ந்தார் என்றால் அது மிகையாகா! அதுபோல் தங்கள் இருவரது பாக்கள் பலவற்றில் சிறந்தவற்றைப் படித்துக் காட்டினேன். பொறுமையுடன் கேட்டு மகிழ்ந்தார். தங்கள் இருவரையும் வெகுவாகப் பாராட்டினார்.

நிற்க. எனதாசானுக்கான வலையை நானே பராமரித்து வருகிறேன். அவர்பெயரில் வலைநிறுவியவனும் நானே! அவருக்கு இணைய வசதி இல்லை. அவர் மகள்களிடம் மடிக்கணிப்பொறிகள் இருப்பினும் அவருக்குக் கணிப்பொறியை இயக்கத் தெரியாமையால் அவற்றைத் தொடுவதில்லை. ஆதலால் அவர் நேரடியாகத் தங்களை வாழ்த்தவில்லையே எனக்கருத வேண்டா. நன்றிகள்.

உமா said...

திரு. அமுதா அவர்களுக்கு, முதலில் தங்களுக்கு என் கோடி நன்றிகள். எவ்வளவோ பணிகளுக்கிடையில் எங்களுக்காக பாத்தென்றலாரிடம் சென்று அவர் ஆசி பெற்றமை என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. மிக்க நன்றி.

//நிற்க. எனதாசானுக்கான வலையை நானே பராமரித்து வருகிறேன்.//

நானும் அவ்வாறுதான் இருக்கவேண்டும் என முன்பே நினைத்தேன். அவர் எங்கள் பாக்களைக் கேட்டார் என்பதே மகிழ்ச்சி. எங்கள் ஆசானாகிய நீங்கள் அவரிடம் காண்பித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி.

அவரது பாக்களைத் தொடர்ந்து வெளியிடவும்.தமிழில் சிறுவர்களுக்கு இப்படிப் பட்ட பாடல்கள் அரிது.உங்களின் இன்றியமையாதயிப் பணிக்குஎன் வாழ்த்துக்கள்.