Tuesday, February 23, 2010

பெற்றவர் உவகை

விளம்- மா- தேமா

பெற்றவர் தமக்கே பிள்ளை
பெருமைகள் சேர்ப்ப திங்கே
கற்றவர் அவையில் நன்றாய்
கற்றவன் இவனே என்று
மற்றவர் கூறக் கேட்க
மனத்தினில் மகிழும் நாளே
உற்றதோர் இன்னல் நீங்கி
உவந்திடும் உள்ளம் அன்றே!

5 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல விளக்கம்

---------

பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும்]]

தெளிவா

-------------
ஈதலின் சிறப்பும் நன்று.

தமிழ் said...

/உண்ணாமல் ஒளித்து வைத்து
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை
என்றைக்கும் இனிதே ஈவாய்! /

அருமை

சொல்ல வார்த்தை இல்லை
ஒரு க‌ண‌ம் திகைத்துப் போனேன்.

அப்படி சொற்கள் வந்து விழுந்து உள்ளன.

/களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா நாளும்
அலைந்திங்கே பெற்ற பாடம்
அனுபவம் தன்னில் உண்டாம்
இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும் மண்ணை
முளைத்திட்டச் செடியோ அன்றி
முற்றிய மரமே காக்கும்./

நன்றாக இருக்கிறது

வாழ்த்துகள்

அண்ணாமலை..!! said...

என்ன வரிகள்..!!!
மேலும் தொடர்க..!!

சொல்லரசன் said...

//இளையவர்க் குதவும் வண்ணம்
இயம்பிட வேண்டும்// கவிதைபல‌

//களைப்புற்ற காலம் என்றே
கருதிட வேண்டா// பதிவுலகில்

உமா said...

திரு.சொல்லரசன்,மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

மிக்க நன்றி ஜமால்.நன்றி திகழ்.உங்கள் அனைவரின் ஊக்கம் தான் நான் தொடர்ந்து எழுதுவது.
திரு அண்ணாமலை வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.