Thursday, January 06, 2011

வலையுலகம்

கண்ணில் தெரியும் கற்பனை இந்த - வலையுலகம்

எண்ணிலாச் செய்திகள் இறைந்துக் கிடக்கும் -வலையுலகம்

மண்ணில் மாந்த முயற்சியின் விளைவே -வலையுலகம்

எண்ணம் பகிர எளிதாய் இனிய -வலையுலகம்.



[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு]

12 comments:

  1. வணக்கங்க
    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வாங்க ஞானசேகரன். வருகைக்கு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.தொடர்க

    ReplyDelete
  3. இவ்வளவு எளிமையாக இலக்கணம் கற்றுத் தந்தால் எல்லா பிள்ளைகளும் ஆர்வமாக தமிழ் கற்கும்.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.சத்திரியன்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் புத்தாண்டு,பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அருமையான தமிழ் பூ!

    ReplyDelete
  7. வணக்கம்
    தங்களின் தமிழ் மிக அருமையாக உள்ளது. தயவு செய்து தங்களின் அடுத்த படைப்பை விரைவில் பதிவு செய்யவும்.... எதிர்பார்புடன்......

    ReplyDelete
  8. வணக்கம்
    தங்களின் தமிழ் மிக அருமையாக உள்ளது. தயவு செய்து தங்களின் அடுத்த படைப்பை விரைவில் பதிவு செய்யவும்.... எதிர்பார்புடன்......

    ReplyDelete
  9. அடுத்த பதிவு எப்போ ? :-))

    ReplyDelete
  10. வணக்கம் திரு.செல்வபிரபு,
    வணக்கம் மதி அவர்களே
    வணக்கம் திரு கருணாகார்திகேயன் அவர்களே

    தங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்க்கும் மிக்க நன்றி
    விரைவில் பாவுடன் வருகிறேன்.
    அன்புடன் உமா

    ReplyDelete
  11. அருமை.. அடுத்த பதிவு எப்பொழுது

    ReplyDelete
  12. வளமிகு தமிழில்
    உளமகிழ் கவிதைகள்

    வாழ்த்தும் வணக்கமும்

    என் வலை கண்க!
    கருத்துரைத் தருக!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete