Tuesday, November 15, 2016

வாழ்த்து

வாழ்க நின்பணி வண்டமிழ் காக்கும்
   வளர்க உன்புகழ் வையகந் தன்னில்
சூழ்ந்து நல்லவர் நின்னுடன் நிற்க
   சொல்லில் தீதற சுவையுடன் கருத்தில்
ஆழ்ந்த சிந்தனை அறத்துடன் காட்டி
   அழகு செந்தமிழ் நாடகம் வளர்த்து
நீள்க நற்றமிழ் புகழுல கெல்லாம்
   நீயும் நிந்திறன் செழிப்புற வாழ்க!

6 comments:

  1. வாழ்த்து பெற்றோர் பேறு பெற்றோர் .
    அருமை.

    ReplyDelete
  2. மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமையான வரிகள்

    ReplyDelete
  4. நற்றமிழ் வாழ்த்து அற்புதம்.வாழ்த்துகள் உங்கள் புலமைக்கு.

    ReplyDelete
  5. வாழ்த்துகள்.

    ReplyDelete