Thursday, May 21, 2020

என் மனமென்னும் மேடையில்

நடக்காத நாடகம்
முடியாமல் தொடர்கிறது...
பேசாத வார்த்தைகள் 
மௌனத்தில் கரைகிறது...

இல்லாத ஓர் உணர்வை 
உள்நெஞ்சம் உணர்கிறது...
சொல்லாத செய்திகளைச்
சுகமென்றே சுமக்கிறது...

பொல்லாத நிஜங்களையோ
பொய்யென்றே சொல்கிறது...
பொழுதெல்லாம் புதிதான
கற்பனையில் திளைக்கிறது...

புரியாத மொழியெல்லாம்
பூவிழிகள் பேசிடவே...
வாய்பேசும் மொழியெல்லாம் 
வசப்படாமல் போகிறது...

நில்லாத நாடகத்தில் 
நிஜமெல்லாம் கனவாக...
கலைந்திடாத கனவெல்லாம்
கற்பனையில்  நிஜமாகும்...

11 comments:

  1. அற்புதம்...கனமான சிந்தனையை வார்த்தைகளில் அடக்கிய திறன் பாராட்டுக்குரியது...வாழ்த்துகளுடன்..

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, இருவருக்கும்...🙏

    ReplyDelete
  3. //சொல்லாத செய்திகளைச்
    சுகமென்றே சுமக்கிறது...//

    அது தானே வாழ்க்கையின் அச்சாணி. அருமையான எழுத்துக்கள். ரசித்தேன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தங்களின் இந்த கவிதையை என்னுடைய ஒரு பதிவிற்கு தம் பெயரோடு உபயோகித்து இருக்கின்றேன். ஆட்சேபம் இருந்தால் சொல்லவும். விளக்கி விடுகிறேன்.

    என் பதிவிற்கான தொடர்பு.

    https://vishcornelius.blogspot.com/2020/05/blog-post_40.html

    ReplyDelete
  5. திரு விசு அவர்களுக்கு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
    எனது கவிதையை தாங்கள் உபயோகித்தது மிகுந்த மகிழ்ச்சியே. நன்றி.
    தொடர்வோம்..

    ReplyDelete
  6. கற்பனையில் நிஜமாகும் காட்சிகளோ சுகமாகும்...
    சுகமாகும் அக்காட்சி நிஜமாக நெஞ்சம் ஏங்கும்...
    ஏங்கித் தவிக்கும் தருணங்களே வாழ்வில் அதிகம்...
    அதிகம் வாழ்வில் கற்பனைகளும் கனவுகளும் ...
    கனவுகள் மெய்ப்பட கடவுளை பிரார்த்திப்போம்...

    உங்கள் கவிதைகள் அருமை சகோதரி....
    எனது பெயர் சீ. உமாமகேஸ்வரி..... சிதம்பரம்...

    ReplyDelete
  7. Anonymous12:51 PM

    கற்பனையில் நிஜமாகும் காட்சிகளோ சுகமாகும்...
    சுகமாகும் அக்காட்சி நிஜமாக நெஞ்சம் ஏங்கும்...
    ஏங்கித் தவிக்கும் தருணங்களே வாழ்வில் அதிகம்...
    அதிகம் வாழ்வில் கற்பனைகளும் கனவுகளும்....
    கனவுகள் மெய்ப்பட கடவுளை பிரார்த்திப்போம்....

    உமது கவிதை நன்று சகோதரி...

    எனது பெயர் சீ. உமா....சிதம்பரம்

    ReplyDelete
  8. கற்பனையில் நிஜமாகும் காட்சிகளோ சுகமாகும்...
    சுகமாகும் அக்காட்சி நிஜமாக நெஞ்சம் ஏங்கும்...
    ஏங்கித் தவிக்கும் தருணங்களோ வாழ்வில் அதிகம்...
    அதிகம் வாழ்வில் கற்பனைகளும் கனவுகளும்....


    உமது கவிதை நன்றி ....
    சீ. உமா....

    ReplyDelete
  9. நல்ல கவிதை ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சீ.உமா, தூதுவன் இருவருக்கும் நன்றி பல

    ReplyDelete