தருவதே மேலாம். - [ நேரிசை ஆசிரியப்பா]
தங்கும் தண்ணீர்த் தாகம் தீர்க்காது,எங்கும் வளமுற இருகரை தன்னில்பாயும் ஆறோ பருகத் தருமேஈயும் கடலில் இரண்டறக் கலந்தும்மீண்டும் மழையாய் எங்கும் பொழிந்தே!யாண்டும் அதுபோல் பணமும் கொடுக்கும்நேராய் பெற்றதை நிறைவோ[டு] ஈந்திடபாராய் நெஞ்சினில் பெருகும் நிம்மதிதேராய் என்றும் தருவதே மேலாம்!ஈயாப் பொருளோ இருந்தே அழியும்பேயாய் மனதில் பயமும் வளரும்தாராய் என்றும் தங்கிடும் அமைதியென்[று]ஊராய்ச் சென்றே உள்ளம் உருகஇறைவனைத் தொழுதிடல் வேண்டாஇரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!
ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
ReplyDeleteஇறைவனைத் தொழுதிடல் வேண்டா
இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!///
அவ்வையே வணக்கம்!!
மரபுக் கவிதை மகளெ!! அருமை!! விரைவில் தமிழ்மணம் நட்சத்திரமாகப் பார்க்கலாம்!!
ReplyDeleteதேவன் மாயம் அவர்களே! என்னைய வைச்சு காமெடி கீமெடி பண்ணாலையே!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி.