Tuesday, February 23, 2010

பெற்றவர் உவகை

விளம்- மா- தேமா

பெற்றவர் தமக்கே பிள்ளை
பெருமைகள் சேர்ப்ப திங்கே
கற்றவர் அவையில் நன்றாய்
கற்றவன் இவனே என்று
மற்றவர் கூறக் கேட்க
மனத்தினில் மகிழும் நாளே
உற்றதோர் இன்னல் நீங்கி
உவந்திடும் உள்ளம் அன்றே!

5 comments:

  1. நல்ல விளக்கம்

    ---------

    பெற்ற பாடம்
    அனுபவம் தன்னில் உண்டாம்
    இளையவர்க் குதவும் வண்ணம்
    இயம்பிட வேண்டும்]]

    தெளிவா

    -------------
    ஈதலின் சிறப்பும் நன்று.

    ReplyDelete
  2. /உண்ணாமல் ஒளித்து வைத்து
    உறங்காமல் விழித்து நின்று
    கண்ணாகக் காக்கும் காசு
    காக்காது போகும் ஓர்நாள்
    மண்ணாகப் போகும் அந்நாள்
    மதிக்காதே உலகம் உன்னை
    எண்ணத்தில் கொண்டே இஃதை
    என்றைக்கும் இனிதே ஈவாய்! /

    அருமை

    சொல்ல வார்த்தை இல்லை
    ஒரு க‌ண‌ம் திகைத்துப் போனேன்.

    அப்படி சொற்கள் வந்து விழுந்து உள்ளன.

    /களைப்புற்ற காலம் என்றே
    கருதிட வேண்டா நாளும்
    அலைந்திங்கே பெற்ற பாடம்
    அனுபவம் தன்னில் உண்டாம்
    இளையவர்க் குதவும் வண்ணம்
    இயம்பிட வேண்டும் மண்ணை
    முளைத்திட்டச் செடியோ அன்றி
    முற்றிய மரமே காக்கும்./

    நன்றாக இருக்கிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. என்ன வரிகள்..!!!
    மேலும் தொடர்க..!!

    ReplyDelete
  4. //இளையவர்க் குதவும் வண்ணம்
    இயம்பிட வேண்டும்// கவிதைபல‌

    //களைப்புற்ற காலம் என்றே
    கருதிட வேண்டா// பதிவுலகில்

    ReplyDelete
  5. திரு.சொல்லரசன்,மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    மிக்க நன்றி ஜமால்.நன்றி திகழ்.உங்கள் அனைவரின் ஊக்கம் தான் நான் தொடர்ந்து எழுதுவது.
    திரு அண்ணாமலை வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete