Tuesday, February 23, 2010

உண்மை அழகு

[மா+மா+காய்]
பாடும் குயிலின் அழகெல்லாம்
பாரீர் அதனின் குரலினிலே
வாடும் மலரும் ஓர்நாளில்
வாசம் அதனை மாற்றிடுமோ?
ஏடும் அழகாம் வெண்தாளில்
எழுதி கருத்தை விளக்கிடவே
நாடும் மனத்தில் அழகெல்லாம்
நன்மை தன்னில் காண்பீரே!

2 comments:

  1. /கண்ணில் வீழும் மண்துகளை
    கைகள் சென்று துடைப்பதுபோல்
    மண்ணில் உயிர்கள் படுமுறுகண்
    மாற்றும் மனதைக் கொள்வோமே./

    நன்று

    ReplyDelete
  2. மிக்க நன்றி திகழ்.

    ReplyDelete