Tuesday, February 23, 2010

உடல் நலம் பேணிட...

காலை எழுந்து கண்மூடி தியானத்தில்
கருத்தை இருத்தல் நலம்.

நடையும் ஓட்டமும் நாளும் பழகினால்
அடையும் நன்மை பல.

உடலும் மனமும் ஓய்ந்திருந்தால் வாழ்வில்
கடலாய் பெருகும் கடன்.

அளவாய் தூக்கம் அறுசுவை உணவு
நலமாய் வாழும் நிலை.

ஆட்டமும் ஓட்டமும் நன்றாம் சிருவர்தம்
நாட்டம் அதிலே நிறுத்து.

3 comments:

  1. அத்த‌னையும் அருமை

    /சிருவ‌ர்/

    ReplyDelete
  2. அருமை உமா அவர்களே.

    உடல் நலம் பேணல் என்று வர வேண்டுமோ?

    உங்கள் கவிதையை (உங்கள் வலைப்பூவின் சுட்டியுடனும் நன்றியுடனும்)எனது வலைப்பூவில் வெளியிட அனுமதிப்பீர்களா?

    அஷ்வின்ஜி
    வாழி நலம் சூழ.
    www.frutarians.blogspot.com

    ReplyDelete
  3. திரு.அஷ்வின்ஜி அவர்களுக்கு
    என் வணக்கம்.

    பிழை சுட்டியமைக்கு நன்றி.

    //உங்கள் கவிதையை (உங்கள் வலைப்பூவின் சுட்டியுடனும் நன்றியுடனும்)எனது வலைப்பூவில் வெளியிட அனுமதிப்பீர்களா?

    கண்டிப்பாக! எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும்.

    ReplyDelete