Friday, March 05, 2010

அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்

[விளம்+மா+மா]

கருவினில் வளரும் பிள்ளை
கருத்தினில் விளங்கும் வாழ்க்கை
கரும்பினில் இனிப்பைப் போன்று
கசப்பிலும் நன்மை உண்டு
வருவதை விரும்பி ஏற்று
வாழ்க்கையில் உயர்வைக் காட்டு
குருவினைப் பணிந்து போற்று
கோவிலாய் மனதை மாற்று.

[என் ஆசானாகிய திரு தமிழநம்பியின் கருத்தை பணிவோடும்,பெருமகிழ்ச்சியோடும் இங்கே அளிக்கிறேன்.
"பாடலின் ஓசை தடையின்றி அமைந்துள்ளதைப் பாருங்கள்.பாவேந்தரின் பாடலை நினைவூட்டுகிறது.பாராட்டு. நன்றி".]

2 comments:

  1. எளிமையா விளங்குபடியாக இருக்கு.

    உங்கள் ஆசான் எங்களுக்கும் ஆசானாகிறார்.

    ReplyDelete
  2. நன்றி திரு.ஜமால்.

    தமிழ்தோட்டத்தில் துவங்கியுள்ள பயிலரங்கம் மிகச் சிறப்பு. திரு. தமிழநம்பி அவர்கள் எளிமையாக, மிக அழகாகச் சொல்லிக் கொடுப்பார். இப்படிப்பட்டத் தளங்கள் நிறைய வர வேண்டும். பயிலரங்கம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள். அங்கும் வருவேன்.
    அன்புடன் உமா.

    ReplyDelete