Tuesday, April 20, 2010

சேமிப்பு

காய் காய் காய் மா
காய் காய் காய் மா

சிறுத்துளிதான் பெருவெள்ளம் சேமிப்பீர் இன்றே
சீராகும் உம்வாழ்வு சிந்திப்பீர் நன்றே
பொறுப்புடனே பொருள்சேர்க்கும் வேளையிலே காணும்
பொய்யான விளம்பரத்தில் போய்மாட்டிக் கொண்டே
தருகின்றேன் பெரும்வட்டி என்போர்த்தம் கையில்
தந்தால்உம் பொருளொன்றும் திரும்பாதே அறிவீர்
மருந்தால்ஓர் மாயத்தால் வளர்ந்திடுமோ பணமும்
மறக்காதீர் ஆராய்ந்தே முறையாகச் சேர்ப்பீர்.

3 comments:

  1. அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //
    Labels: ஆசிரிய மண்டிலம், எண்சீர் மண்டிலம்

    //
    இது சம்பந்தமா நமக்கு ஒரு மண்டையும் புரியலைங்க

    ஆனா மேல மேட்டர் superங்க

    ReplyDelete
  3. ஆனா மேல மேட்டர் superங்க// அதுதான நமக்கு வேணுங்கறது....

    திரு.வேலு வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    மரபு பாக்கள் கடினமானதல்ல. கொஞ்சம் முயற்சித் தேவை. புதுக்கவிதைகளில் வருவதைப்போல் மற்ற மொழி சொற்கள் கலக்காதெழுதுவது சிறப்பு. முயலுங்களேன்.

    ReplyDelete