சில கவிதைகள்
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Sunday, October 21, 2012
மின்னல், இடி, மழை
வான பக்கத்தில்
மின்னல் கோடுகள்
கிறுக்கப்பட்டதால்
மேகக் குழந்தைகள்
முட்டிக் கொண்டு
அழுது தீர்த்தன...
விடியல்
இருட் கள்வன்
ஒளித்ததையெல்லாம்
பகற் போலிஸ்
பட்டியலிட்டது...
நாள்
இருட் கடலில்
ஒற்றை வெண்தோணியில்
மேக வலைவிரித்து
பிடித்த
நட்சத்திர மீன்களை
பகற் கைகள்
பறித்துக் கொண்டன...
நட்சத்திரங்கள்
*வெளிச்ச
உண்டியல் உடைந்து
இருட்டுத் தரையில்
சிதறிய
சில்லரை காசுகள்...
*சூரிய
மாலையிலிருந்து
உதிர்ந்த
மல்லிகைப் பூக்கள்...
‹
›
Home
View web version