கல்லாய் மனத்தினை கடிதாக்கி
சொல்லால் தீயெனச் சுட்டெரிக்கும்
பொல்லா நோயது சுயநலம்போல்
கொல்லும் மற்றெதும் அறிவீரோ?
மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
Saturday, August 28, 2010
தன்னம்பிக்கை
சற்றுன் மனத்திருள் நீயகற்றி
பற்றென் கைகளை பயம்விலக்கி
கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை
உற்ற துணையுனை உயர்த்திடுவேன்!
மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
பற்றென் கைகளை பயம்விலக்கி
கற்றுத் தெளிந்திடுன் நம்பிக்கை
உற்ற துணையுனை உயர்த்திடுவேன்!
மா + விளம் + காய் = எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம்.
தெரிந்துச் செயல்படு
உரிமையும் கடமையும் உணர்ந்திடுவாய்
அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய்
பெரியவர் சிறியவர் செய்கையினால்
தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய்.
விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.
அறிவுடன் அன்பையும் கூட்டிடுவாய்
பெரியவர் சிறியவர் செய்கையினால்
தெரிந்துநீ செயல்படு சிறப்படைவாய்.
விளம் + விளம் + காய் என்ற தளையமைப்பைக் கொண்ட வஞ்சி மண்டிலம்.
Wednesday, August 25, 2010
தமிழ் வாழ்க!
ஓர் மராத்திய பெண் தமிழை தன் இரண்டாவது மொழியாக விரும்பி ஏற்று கற்று [தமிழர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரண்டாவது மொழியாகக்கூட தமிழ் கற்பிக்காமல் ஹிந்தி, சமஸ்கிருதம் கற்பிக்கும் இக்கால கட்டத்தில்] அதில் பல பரிசுகளும் சிறப்புகளும் பெற்றிருப்பது பாராட்டக்கூடியது. முண்டாசு கவிஞன் பாரதியையும் திருக்குறளையும் நன்றாக அறிந்த அவர் பாரதியை பற்றிக்கூறும் கருத்துகள் உண்மை பொதிந்தவை. பல மலிவான சுய முன்னேற்ற நூல்கள் விற்பனையில் சாதிக்கும் இன்று பாரதியின் கவிதைகளை சுய முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு இளைஞனும் பயன் படுத்துவானேயாயின் எவ்வளவு பலன் கிடைக்கும். அடிமை இந்தியாவில் பிறந்த பாரதி இன்று சுதந்திர நாட்டில் இருந்திருந்தால்?? ஆஹா 2020 என்ன 2000 லேயே நாம் வல்லரசாகியிருப்போம். சிறந்த கருத்துகளும் தெளிவான பேச்சும் கொண்ட
செல்வி ஜெயஸ்ரீயை வாழ்த்துவோம், வாருங்கள்.
திரு.சீனிவாசன் அவர்களின் இப் பதிவை தமிழார்வமுள்ள அனைவரும் கண்டிப்பாக படிக்கவும். ஒலி நாடாவையும் கேட்கவும்.http://vetripadigal.blogspot.com/2008/04/blog-post_03.html

Tuesday, July 27, 2010
பாதை நமதே பயணம் நமதே!
தரவுக் கொச்சகக் கலிப்பா
காய்+காய்+காய்+காய்
கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,
மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே
முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி
உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!
காய்+காய்+காய்+காய்
கற்பதுவும் கேட்பதுவும் கருத்தினிலே தெளிவுறவே,
மற்றவரின் சிந்தனையை மறுத்திடவும் அன்றியதே
முற்றெனவும் முடிந்திடாதுன் எண்ணத்தைச் சீராக்கி
உற்றதொரு நல்வழியை உனதாக்கி நடப்பாயே!
உண்மையின்பம்
தரவுக் கொச்சகக் கலிப்பா
[காய் காய் காய் காய்]
நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
[காய் காய் காய் காய்]
நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்
கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே
நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ
ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
Wednesday, July 14, 2010
நெஞ்சில் தைக்குமே முள்.
வெண்தாழிசை
கொஞ்சும் தமிழைக் குறைசொலிப் பேசி
நஞ்செனிப் பிறமொழி நயப்பார் தம்மால்
நெஞ்சில் தைக்குமே முள்.
[1. இது ஒரு மூன்றடிப்பாடல்.
முதல் இரண்டு அடிகளும் நான்குசீர் அடிகள்.
மூன்றாம் அடி மூன்று சீர் அடி.
2. மூன்றடிகளும் ஒரே எதுகை பெற்று வரவேண்டும்.
3. கடைசி சீர் ஓரசைச் சீராக நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும்.
4. கடைசிச்சீர் தவிர மற்ற சீர்கள் ஈரசைச் சீர்கள்.

சிரித்து வாழ வேண்டும்.
வெண்செந்துறை [ ஆறு சீர்கள்]
1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.
2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!
3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!
1.பட்டுச் சிறகை விரித்துப்
பறக்கும் அழகைப் பாரு
சிட்டைப் போலே நீயும்
சிரித்து வாழப் பழகு!.
2. ஓடி யாட வேண்டும்
உண்மை பேச வேண்டும்
கூடி வாழ மற்றோர்
குறைகள் மறக்க வேண்டும்!
3. தேடிப் பெற்ற பொருளை
சேர்த்துக் குவித்தி டாமல்
வாடும் ஏழை மக்கள்
வறுமைப் போக்க ஈவாய்!
நல்லோர் நட்பு.
எண்சீர் வெண்செந்துறை
காசு பணத்தால் விளையும் நன்மை
கையில் உள்ள வரைதான் உண்மை
நேசங் கொண்ட நல்லோர் நட்போ
நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!
காசு பணத்தால் விளையும் நன்மை
கையில் உள்ள வரைதான் உண்மை
நேசங் கொண்ட நல்லோர் நட்போ
நிலைத்த யின்பம் நிச்சயந் தருமே!
Wednesday, June 23, 2010
வெண்செந்துறை
1. ஓரடியில் நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச் சீர் வரலாம்.
2. ஒவ்வொரு சீரும் இரண்டு அசைச் சீராக இருக்க வேண்டும்.
3. இரண்டு அடிகள் எழுத வேண்டும்; இரண்டு அடிகளும் அளவு ஒத்து ( நான்கு அல்லது ஆறு அல்லது எட்டுச்சீரில் அமைந்து) இருக்க வேண்டும்.
4. இரண்டு அடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. நாற்சீர் அடியானால், 1, 3ஆம் சீரில் மோனையும்
ஆறு சீர் அடியானால், 1, 4ஆம் சீரில் மோனையும்
எட்டுச் சீர் அடியானால் 1, 5ஆம் சீரில் மோனையும் அமைய வேண்டும்.
அன்புடை இல்லாள் அகத்திடை இருக்க
வண்டதைப் போலே வாழ்வதைத் தவிர்ப்பீர்.
ஒருமுறை தவறி ஒருபொய் சொல்ல
மறைக்கவோ ஆயிரம் மனமழிந் திடுமே!
அஞ்சுதல் பொய்ச்சொலல் அழுதுப் புலம்பல்
கெஞ்சுதல் யாவுமே கீழோர்ச் செயலாம்.
[திரு.தமிழநம்பி அவர்கள் தமிழ்த் தோட்டத்தில் மரபுப் பா பயிலரங்கத்தில் பா எழுத முதலிலிருந்து சொல்லித் தருகிறார். ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக வந்து பயன் பெறவும்.]

Monday, May 31, 2010
கலிமண்டிலம்
தேமாங்காய் + தேமா + புளிமாங்காய் + தேமா +
புளிமாங்காய் + தேமா + புளிமா
வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்
புளிமாங்காய் + தேமா + புளிமா
வில்லோடு நாணும் விரைந்தேவும் அம்பும்
இருந்தாக வேண்டும் விடுக்க
சொல்லோடு அன்றி செயலாற்ற, நேர்மை
திறனோடு வேண்டும் சுடுசொல்
இல்லாத பேச்சு இணையான கூட்டு
நலியாத நல்ல இலக்கும்
பொல்லாங்குச் சொல்லும் பகையோரை வென்று
புறம்போகச் செய்யும் துணிவும்
Wednesday, May 26, 2010
நன்றே நாடுக!
நன்று செய்திட நாடிடு நம்முயிர்
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.
என்றுப் போகுமோ யாரதைக் கூறுவர்
இன்றுச் செய்திடு இக்கணஞ் செய்திடு
கொண்டு சென்றிடக் கூற்றுவன் தோன்றுமுன்.
Thursday, May 20, 2010
ஈகை
குறிலீற்றுமா + கூவிளம் + கூவிளம் + கூவிளம்
தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.
தேடிப் பெற்றதோர் செல்வந்தண் ணீரென
ஓடும் நின்றிடா(து) ஓரிடம் என்பதால்
வாடி நிற்கும் வறியவர்க் கேப்பொருள்
நாடி ஈவதே நல்லவர் செய்கையாம்.
Wednesday, May 19, 2010
அக்னி' பரீட்சை
அன்று..
அக்கினிப் பரீட்சையில்
வென்றது
சீதை..
தோற்றது
இராமன்
நியாயம்
இன்றோ!
அக்னி' பரிசோதனையில்
வென்றது
அறிவியல்..
தோற்றது
மனிதநேயம்
ஒற்றுமை
செய்தி: அணு ஆயுதத்தை ஏந்திச் சென்று 2000கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் அக்னி 2 ஏவுகனை பரிசோதனை வெற்றி.

Subscribe to:
Posts (Atom)