நம்மை பெற்று வளர்த்து இந்த பூமியை நமக்கு விட்டுத்தந்த நேற்றய சமுதாயமும் நடுத்தெருவில் வீழ்ந்திருக்க நாம் காக்க வேண்டிய நாளய சமுதாயமும் நலிந்திருக்க இன்றய சமுதாயம் சாதித்தது என்ன? இப்படி பலர் நலிந்திருக்க நாம் உண்டு உடுத்தி வாழ்வது வெக்கமாகவும் வேதனையாகவும் உள்ளது. மனித்தன்மை செத்துவிட்டதா? அதன் இலக்கணம் தான் மாறிவிட்டதா?
மெத்தப் படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோப் பட்டும் புரியவில்லை நித்தமிங்குப்
போரை விரும்பிப் புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.
மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மையே;
கண்ணுற்ற போது கவியெழுத சொல்லில்லை
சோர்வுற்ற நெஞ்சின் துயர்களையக் கற்ற
தமிழன்றி இல்லை துணை
மெத்தப் படித்தும் பயனில்லை முன்னவர்
எத்தனையோப் பட்டும் புரியவில்லை நித்தமிங்குப்
போரை விரும்பிப் புரிந்திடுவார் பூமியில்
யாரைத்தான் நோவதோ போ.
மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மையே;
கண்ணுற்ற போது கவியெழுத சொல்லில்லை
சோர்வுற்ற நெஞ்சின் துயர்களையக் கற்ற
தமிழன்றி இல்லை துணை
2 comments:
உங்கள் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்!
இரண்டு வெணபாக்களும் நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு திருத்தம் செய்துவிடுக.
இரண்டாம் பாட்டில், முதல் அடி இறுதிச்சீருக்கும் இரண்டாமடி முதற்சீருக்குமான
தளை வெண்டளையாக அமையாதுள்ளது.(உண்மை-கண்ணுற்ற)
முதலடியின் இறுதிச்சீரை 'உண்மையே' என்று திருத்தினாலே தளை தட்டாது.
மீண்டும் என் இனிய பாராட்டுகள்!
தொடர்ந்து எழுதுங்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு தமிழ்நம்பி.
பிழைச் சுட்டியமைக்கும் மிக மிக நன்றி.
திருத்தி விடுகிறேன்.
Post a Comment