வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்
மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய்
கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்;
விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில்
சன்னல் கதவுக்கும் சீலை.
[புகைப்படம் திரு ஞானசேகரனின் 'அம்மா அப்பா' விலிருந்து]
5 comments:
மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டையை போட்டிருக்கு
சேரிக்குள்ளே சின்ன புள்ள அம்மனமாயிருக்கு
-----------------
இந்த வரிகள் ஞாபகம் வந்தன ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.ஜமால்.
மானுடம் ஒரு கேள்விக்குறியாகியுள்ளது..
நல்ல வரிகள் உமா..
வாழ்த்துகள்
வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்
மக்கள் ஒருபக்கம், விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
ஊழல் பெருசாளிகள் மண்ணின் மறுபக்கம் இருக்கும் வரை இந்த ஏற்றதாழ்வு இருக்கும்.
உங்க தொடர்பதிவு அழைப்புக்கு நன்றிங்க உமா.
நன்றி திரு.ஞானசேகரன்.
வாங்க திரு.சொல்லரசன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment