கண்ணில் தெரியும் கறுப்பு, சடுதியில்
விண்ணிலே பட்டாய் விரிப்பு,இருளிலே
வெண்ணிலா வானின் வனப்பு; மலர்களே
மண்ணின் வசந்த வெடிப்பு.
[இயைபு தொடையில்]
[நம்முன் மெதுவாக தோன்றும் கருமை, கரியப் பட்டு விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு.
6 comments:
அருமைங்க உமா. நான் நீங்கதான்னு நினைச்சுக் கிட்டு வேற உமா கிட்ட இவ்வளவு நாள் பேசிக்கிட்டு இருந்திருக்கேன்... இன்று தான் தெரியும் அது நீங்கள் இல்லைன்னு :))
ஐயோ ஐயோ..
-வித்யா
மரபுக் கவிதையில் ஜாலம் செய்கிறீர்கள்!!!
//அருமைங்க உமா. நான் நீங்கதான்னு நினைச்சுக் கிட்டு வேற உமா கிட்ட இவ்வளவு நாள் பேசிக்கிட்டு இருந்திருக்கேன்... இன்று தான் தெரியும் அது நீங்கள் இல்லைன்னு :))
ஐயோ ஐயோ..
-வித்யா//
ஹ ஹ்ஹா இருக்கட்டுமே இன்னுமொரு நண்பி. அவருக்கும் என் வணக்கங்கள்.
வாழ்த்துக்கு நன்றி.
நன்றி டாக்டர் தேவகுமார் அவர்களே.
//அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு. //
அழகான வெண்பா...
//விரித்ததைப் போல் சட்டென்று பரவ அவ்விருளில் வெண்ணிலா தோன்றுவது வானின் அழகு. அதுபோல் பசுமை போர்த்திய வசந்த காலத்தில் பலவண்ண மலர்கள் மலர்வது மண்ணின் அழகு. //
நன்று விளக்கத்துடன் கூடிய உங்களின் வெண்பா கவிதை...
தொடருங்கள்...
Post a Comment