Saturday, September 12, 2009

இலங்கையில் இனி - [நேரிசை ஆசிரியப்பா]

திரு. தமிழநம்பி அவர்களின் [http://thamizhanambi.blogspot.com/2007/12/blog-post.html] ஒர் தமிழ்ச்செல்வன் உயிர் ப்றித்தாலென்? ' என்ற அவரது பாவினுக்கு பின்னூட்டமாக எழுதியது.[முதலில் அப்பாடலைப் படிக்கவும்.]


அருந்தமிழ் உணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
பெரும்படை கொண்டேப் பீழைச் செய்தனர்
கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்,
கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்.
பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
மருளாவே வேண்டா மனிதம் விழித்திடும்
முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
கொன்றுநாம் அழித்போம் களைதனை என்றால்
நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
சிந்தியச் செந்நீர் சிங்கள மண்ணிலும்
வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!

2 comments:

Admin said...

அருமையான வரிகள்

V.THAMIZHMARAIYAN said...

கவிதைகள் பச்சை வண்ணத்தில் இருப்பதால் என்னால் படிக்க முடியவில்லை. சிவப்பு வண்ணம் பொருத்தமாக இருக்கலாம். நன்றி.