பணிவுடன் உழைப்பாய் புகழுடன் உயரவே!
துணிவுடன் எழுவாய் துயர்தனை வெல்லவே!
அணியுடன் சேர்ந்தே அழகாம் செய்யுளே!
கருத்துடன் கருமம் சிறக்கும் என்றுமே!
கரும்புடன் இனிப்பு கலந்தே இருக்குமே!
விரும்பியே வினைச்செய விளையும் நன்மையே!
நன்மையேச் செய்திட நானிலம் வாழுமே!
அன்பினைக் காட்டியே ஆளுவோம் மனதையே!
7 comments:
அடிமறி மண்டில ஆசிரியப்பா நன்றாக இருக்கிறது.
நன்று
உமையவள் உமிழ்ந்திடும் நீருங் கவிதையே ! *
உமா அவர்களே: உங்கள் செய்யுட்கள் நல்ல சொற்செரிவும், பொருட்செரிவும் பெற்றுள. வாழ்த்துகள்.
* உங்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம் (அ/) கவி காளமேகத்திற்கு உமையவள் நீர் உமிழ்ந்து அருளிய கவித்திறனைப் பற்றிப் பாடுவதாகவும் கொள்ளலாம்
திரு. தமிழநம்பி அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களின் வழிகாட்டலால் அடிமறிமண்டிலமும் கற்றதில் மகிழ்ச்சி. மற்றவைக் கற்க ஆவல். திரு அமுதா விரைவில் வலைப்பக்கம் வருவார் என நம்புவோம். மீண்டும் நன்றியுடன்
உமா.
திகழ் மிக்க நன்றி.
திரு அவனடியார் அவர்களே மிக்க நன்றி, வழக்கம் போல் அழகான வார்த்தையாடலில் வாழ்த்தியுள்ளீர். மிக்க நன்றி.
அருமை..!! அருமை..!!அருமை..!!
As a bottom note if you had explained about the 'paa's it would have been great.
Post a Comment