Tuesday, October 13, 2009

நல்லதே நாடுக

இல்லாள் தன்னால் இல்லறம் சிறக்குமே!
நல்லாட் சியினால் நாடுயர்ந் திடுமே!
நல்லதோர் விதையே மரமா கிடுமே!
நல்லெணம் மட்டுமே நமையுயர்த் திடுமே!

6 comments:

தமிழநம்பி said...

அருமை!
அடிமறிமண்டில ஆசிரியப்பா மிக நன்றாக உள்ளது.

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல் அழகு....
என்னங்க உமா நீண்ட நாட்களாய் காணவில்லை
நம்ம பக்கமும் வந்துட்டு போங்க‌

உமா said...

திரு.தமிழநம்பி அவர்களுக்கு மிக்க நன்றி. தங்களின் வழிகாட்டலோடு மேலும் முயற்சிக்கிறேன். நன்றி.

உமா said...

திரு. ஞானசேகரன். மிக்க நன்றி. கொஞ்ச நாளாய் வேலை அதிகம்,அம்மாவின் உடல் நலமின்மை, குழந்தையின் தேர்வு, பண்டிகை என்ற பல காரணங்களால் வலைப்பக்கம் வரயியலவில்லை. இதோ இனி தினமும் வருவேன். எழுத முடியவில்லை என்றாலும் உங்கள் வலைகளையெல்லாம் படிக்கவாவது வருவேன். சில நாட்களாய் வலைப்பக்கம் வராத போதுதான் இந்த வலைபதிவிற்கு நான் எவ்வளவு அடிமையாகிவிட்டேன் எனப் புரிநத்து. என்னைப் புதுப்பித்துக்கொள்ளவாவது இப்பக்கம் வருவேன். தங்களின் அன்புக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

உமா said...

நன்றி திகழ்.

அண்ணாமலை..!! said...

பின்னுகிறார்கள் தமிழ்ப்பூக்கூடை..!!
வாழ்க..!! வாழ்க..!!