ஆடாத காலும் அமைதியுறும் தூக்கமும்
நாடா மனத்தினில் நன்னிறைவும் - சாடாமல்
என்னுடன் சுற்றமும் ஏற்றமுற சூழ்ந்திருந்தால்
என்றும் திருநாள் எனக்கு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.அவரது திருத்தலுக்குப் பின்]
விளக்கம்: [யாருக்குமே சரியா புரியலைங்கறதுனால...]
மக்கள் அனைவருக்கும் திருநாள் , பண்டிகை என்பன மிகவும் கோலாகலமானவை.ஆனால் முதுமையில் ஒருவருக்கு எது திருநாளாக அமையும். இந்த தீபாவளியில் முதியவர் பட்டாசு சத்தத்தில் எவ்வளவு கஷ்டபட்டிருப்பர் என எண்ணியதில் எழுதியது இப் பா.
ஓடியாடி திரியும் மக்கள் ஒரு கட்டத்தில் தளர்ந்து தமது எல்லைச் சுறுங்கி விடும் போது மனம் வலிக்கும். முதுமையில் கால்கள் தள்ளாடும், மனதில் பயம் வரும், இரவில் அமைதியான தூக்கம் குறையும், இன்றய காலகட்டத்தில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இளையத் தலைமுறையினர் முதியோரை கவனித்துக்கொள்வது குறைந்துவிட்டது. முதுமையில் தனிமை மிகக் கொடுமை. இவ்வாறில்லாமல் சுற்றத்தார் சூழ்ந்திருக்க, நடைத் தள்ளாடாமல், அமைதியான தூக்கமும், கலக்கமில்லாத மனமும் அமைந்தாலே அந்நாள் அவர்களுக்கு திருநாளாக அமையும். இப் பா முதியவர் சொல்வதாய் அமைக்காப்பட்டுள்ளது.]
7 comments:
புரியலயே உமாஜி :-)
//ஆடாத காலும்//
அர்த்தம் புரியலங்கா
சாதாரணமாகவே உறவை நாடும் மனது. வயதாகிவிட்டால் கேட்கவேண்டுமா. பாடல் நன்றாக இந்த உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது. நன்றி, வாழ்த்துகள் உமா!
ரொம்ப அற்புதமான கவிதை உமா. cheers.
உமாஜி, பிரமாதம். நேரிசை வெண்பாதானே இது? அதுக்கும் ஆசிரியப்பாவுக்கும் என்ன வேறுபாடு? (தமிழ்லே இலக்கணக் குறிப்பு வரைகவுக்கு மேலே ஒண்ணும் தெரியாதுங்க. அதுல கூட வினைத்தொகை வந்தா மார்க் வாங்குவேன். ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை எல்லாம் கேட்டா கேட்டவங்களை உடன் தொகையலா அறைச்சிடலாமான்னு தோணும்!)
http://kgjawarlal.wordpress.com
திரு.உழவன்,திரு.ஞானசேகரன், திரு.அவனடிமையார், திரு.சக்திபிரபா,திரு.ஜவஹர். அனைவருக்கும் நன்றி.
திரு.ஜவஹர் அவர்களே நீங்கள் மிக எளிதாக தமிழில் இலக்கணம் அறிய இந்த முகவரிக்கு வரவும்
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/ திரு.அகரம் அமுதா அவர்களின் பக்கம். அருமையானது. முதல் பாடத்திலிருந்து படியுங்கள், பிறகு உங்களால் வலைப்பக்கம் வராமலிருக்க முடியாது. உங்களின் கேள்விக்கான விடை திரு தமிழநம்பியின் பாடத்திலிருக்கும். அறிந்து முயற்சி செய்தால் நாங்கள் அனைவருமே மகிழ்வோம். [தற்சமயம் அமுதா அவர்கள் வலைப்பக்கம் வரயியலா நிலையானாலும் மீண்டும் விரைவில் வருவார் என எதிர்பார்க்கலாம்]
அன்புடன் உமா
இவ்வளவு அருமையான தமிழ்ப்பாடல்களைப்
பார்க்கையில் எனதுள்ளம் தமிழால் நிறைகிறது..!!!!
வாழ்க தமிழ்..!!
உங்கள் பணிதொடர வாழ்த்துகிறேன்..!!
Post a Comment