Thursday, October 22, 2009

நன்றாகச் செய்க நயந்து.

எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனத்தை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.

எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]

12 comments:

க.பாலாசி said...

//எக்காரியம் செய்தாலும் அதில் நம் கருத்தை முழுமையாக செலுத்தி, விருப்பத்துடன் உண்மை மாறாமல் உழைத்தோமானால் அதனால் உண்மையான இன்பமும் பலனும் உண்டு.
[திரு.தமிழநம்பி அவர்களின் பக்கத்தில் பின்னூட்டமாக எழுதியது.]//

தேவையான பகிர்வு...நன்றி...

சொல்லரசன் said...

//எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனதை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக//

இன்று மனமொன்றி வேலை பார்ப்பவர்கள் அரிதாகிவருவதுதான்
கவலைகொள்ள செய்கிறது

ஆ.ஞானசேகரன் said...

//எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனதை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக - //


சத்தியமான வார்த்தை

vaigarainila said...

உண்மை. கவிதை யதார்த்தமாக இருக்கிறது.

Unknown said...

unakum than ethu unnathu thozhilai unnai thavira unnathamaga nesika yarum eruka kudathu

Unknown said...

ethu unnakum than un thozhilai unnai thavira unnathamaga seiya yarum illa

தேவன் மாயம் said...

வெண்பா மட்டும்தான் எழுதுவேன் என்று அடம் பிடிக்கிறீங்களே!!

தேவன் மாயம் said...

அருமை!

தொடருங்கள்!!

தேவன் மாயம் said...

நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க!!

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி டாக்டர். சில நாட்களாய் பங்குச் சந்தைப் பக்கம் கவனம் செலுத்தி வருவதால் எழுதமுடியவில்லை. மரபில் எழுதிப் பழக வேண்டுமென்பதால் நிறைய எழுதினேன். இனி எல்லா வடிவங்களிலும் தொடர்கிறேன். மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் உமா,... என்ன நம்ம பக்கம் வருவதில்லை... வெலைப்பழுவாக இருக்கும் என்று நினைக்கின்றேன்...

உமா said...

வணக்கம் திரு.ஞானசேகரன். வெலைப்பழுவாக????????
வேலை அதிகம் தான் ஆனாலும் நான் சற்றே பங்குச் சந்தையின் பக்கம் என் கவனத்தைத் திருப்பியிருக்கிறேன். அதுவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒன்றையே எப்போதும் செய்யமுடியாதல்லவா? ஒரு மாற்றத்திற்காகத்தான். இலக்கணப் பாடமும் சற்று தடைப்பட்டுள்ளது. அதுவும் காரணம். இனி தொடர்ந்து வாசிக்கிறேன்.
அன்புடன் உமா.