சின்னதாய்
காயம்
வலி
துன்பம்
துயரம்
பிரிவு
இழப்பு
தடை
தயக்கம்
இவை தன்
இருப்பை மறந்து
இயந்திரமாய்
மாறாதிருக்க
மனிதக் குழந்தைக்கு
இறைவன் ஊட்டிய
கசப்பு மருந்து.
கயமை
கர்வம்
கோபம்
பொறாமை
பேராசை
ஆணவப்
பிணிக்கு
ஆண்டவன் அளிக்கும்
அருமருந்து
அன்பு
தூய்மை
நேர்மை
விடாமுயற்சி
தன்னம்பிக்கை
தனைவளர்க்க
தெய்வம்
தரும் மருந்து.
மண்ணில்
மனிதம் காக்கும்
மா மருந்து..
[திருநெல்வேலிக்கே அல்வா! மாதிரி டாக்டர் தேவன் மாயம் அவர்களுக்கு சுரம் கண்டப் போது [சுரவேகத்தில் ?] அழகான காய்ச்சல் கவிதை எழுதியிருந்தார். அதை படித்ததும் எழுதியதுதான் இது.]
7 comments:
மருந்து கசப்பு
கசப்பாய் இருக்கும் பல - பாகற்காய் போன்று - மருந்தாகவே இருக்கின்றது.
வாழ்க்கையிலும் கசப்பான சம்பவங்கள் ஒரு மருந்தாய் இருக்கின்றது - அனுபவமெனும் மருந்து - மீண்டும் அடிபடாமல் இருக்க.
நன்றி ஜமால்.
நல்லா எழுதியிருக்கீங்க...!
எழிமையா அழகான வரிகளால் சூப்பர்.....
நன்றி திரு.வசந்த்.
நன்றி திரு. ஞானசேகரன்.
ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துக்கள்..
// அழகான காய்ச்சல் கவிதை எழுதியிருந்தார். அதை படித்ததும் எழுதியதுதான் இது.]//
ஹாஸ்பிடல் அவரோடது, ஆபரேஸன் உங்களோடதா? ரைட்...நைஸ்....
Post a Comment