இன்று காணும் பொங்கல் திருநாள்
நன்றாய் காண' வேண்டும்
'காந்தி' சிலைமுதல்
'கண்ணகி' சிலைவழி
'மெரினா' கடற்கரை வரையிலும்
மெதுவாய் நடந்தால்
பெரிதாய் காணலாம்...
தீவுத் திடலில்
திரளும் கூட்டம்
பொருட்காட்சி காண
பெருகும் மக்களின்
பொருட்களில் நன்றாய்
பொங்கக் காணலாம்...
காக்கிச் சட்டையின்
கண்களில் கொஞ்சம்
கடுமைக் காணலாம்
கொடுத்தே விட்டால்
'மாமூலாய்' மகிழ்ச்சிக் காணலாம்...
மாநகரப் பேரூந்தில்
மக்கள் நெரிசல்
கூட்டமாய் இருக்கும் கொஞ்சம்
கூடவே காணலாம்...
காணும் பொங்கலில்
காணாது விட்டால்
பிரியாணி, பாக்கெட்,
பீடியு மில்லை, மீதியு மில்லை
ஓடியே சென்றுடை யணிந்து
வாடி! செல்வோம் வகையாய்
காணும் பொங்கல் நாமும் காணவே!
[அட இது நம்ம பிளேடு பக்கிரியும் அவங்க சம்சாரமும் கொண்டாடின காணும் பொங்கலுங்க.]
2 comments:
கானும் பொங்கல் கவிதை அருமை.உற்றார் உறவுகளை கானும் பொங்கல்,எல்லாரும் ஒன்றுகூடி மகிழும் கிராமத்து கலாச்சாரம் மங்கிபோவது வருத்தமே.
மிக்க நன்றி திரு.சொல்லரசன். வெகு நாட்களுக்குப் பிறகு நீங்கள் வலைப் பக்கம் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி.
Post a Comment