மந்தம் தனிமை வாட்டம் போக்கும் - புத்தகமே
எந்திர உலகின் இயக்கும் ஆற்றல் - புத்தகமே
அந்தம் இல்லா அறிவைத் தருவது - புத்தகமே
சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!
[1. இது நான்கடி கொண்ட வெளிமண்டில வகைப் பா.
2. ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்களும் – நான்கு அடிகளின் இறுதியிலும் ஒரே தனிச்சொல்லும் அமைய வேண்டும்.
3. தனிச்சொல் தவிர்த்து, எல்லாச் சீர்களும் இயற்சீர்களாக (ஈரசைச் சீர்களாக) இருக்க வேண்டும்.
4. நான்கடிகளும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
5. முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவது சிறப்பு.]
2 comments:
அருமை, தங்களின் பணி தொடரட்டும்
சிந்தைத் தெளிய தெரிவோம் நல்ல புத்தகமே!//
சிந்தை கவர்ந்த அருமை வரிகளுக்குப் பாராட்டுக்கள்.
Post a Comment