வாழ்க்கை
ஓட்டப் பந்தயம்!
ஜனனம்
துவக்கம்
மரணம்
இலக்கு!
மன நிறைவே
வெற்றி...
ஆசை
தோல்வியின் முதற்படி
சிலரது வாழ்க்கை
100மீ பந்தயம்
துரிதமாய் துவங்கி
சிகரம் எட்டி
சட்டென முடியும்..
பாரதி போல்
சிலருக்கு
தொடர் ஓட்டம்
உடல் தளர்ந்து
இலக்கடையும்
நீண்ட ஓட்டம்
தலைமுறைத் தாண்டி
அனுபவம் சுமந்து
அடுத்தவர் ஓடும்
அயராத ஓட்டம்..
இலக்கடைவது
நிச்சயம்...
வெற்றிக்கனி
சிலருக்குத்தான்....
தடைகள் இடற
தள்ளாடும் ஓட்டம்..
வெற்றி வேண்டுமா?
மீண்டும் எழுக!
ஆசை
கோபம்
பொறாமை
தடைகள் கடந்து
தாண்டிச் செல்க!
இலக்கடைகையில்
வெற்றி நிச்சயம்...
7 comments:
வாழ்வின் பல்வேறு பரிமானங்களை
ஓட்டத்தில் இணைத்துச் சொல்லிப்போனவிதம்
மனம் கவர்ந்தது
மனம் கவர்ந்த அருமையான படைப்புக்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
ada ..
arumai!
டைகள் கடந்து
தாண்டிச் செல்க!
இலக்கடைகையில்
வெற்றி நிச்சயம்...
அருமையான கவிதை !
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்
நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_20.html) சென்று பார்க்கவும்...
நன்றி...
வணக்கம்.
உமா
உங்களின் வலைப்பக்கம் முதல்தடவையாக வந்தேன் அதுவும் வலைச்சரம் வலைப்பூவில் பார்த்து.
உங்களின் கவிதையின் வரிகள் அழகாக உள்ளது.நேரம் இருக்கும் போது நம்மட தளத்துக்கு வாருங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்.
உமா
உங்களின் வலைப்பக்கம் முதல்தடவையாக வந்தேன் அதுவும் வலைச்சரம் வலைப்பூவில் பார்த்து.
உங்களின் கவிதையின் வரிகள் அழகாக உள்ளது.நேரம் இருக்கும் போது நம்மட தளத்துக்கு வாருங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்.
சீனி, ரமணி, இரர்ஜேஸ்வரி, திண்டுகல் தனபாலன், ரூபன் அனைவருக்கும் என் நன்றி. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக் கண்டு மிக மகிழ்ச்சி அடைகிறேன். பொறுப்புணர்கிறேன். கண்டிப்பாகத் தொடர்வோம்.
Post a Comment