Thursday, May 28, 2020

கொரோனா - கல்விக் கொள்கை

கொல்லும் கொடிய வைரஸாம்,
கொரோனா' என்றே பெயரதற்காம்...
வீட்டில் இருக்கச் சொன்னாங்க, 
விரட்டி அடிப்போம் என்றாங்க...

அதனால்...

பள்ளிக் கூடம் போகல,
பாடத் திட்டம் எதுவுமில்லை...
வீட்டுப் பாடம் கொடுக்கல,
விடிய விடிய படிக்கல...

ஆனால் 

வேடிக்கை யாக தினந்தினமும்
வாழ்க்கைப் பாடம் கற்றோமே!!
ஒழுக்கம் உயர்வு என்பதனை
உணர்ந்தோம் பழகி பார்த்ததனால்...

அடிக்கடி கையை கழுவிக்கொள்!
ஆசாரக் கோவை மனதிற்கொள்!
அடுப்படி உணவே மருந்தென்றே
ஆச்சி சொன்ன பாடந்தான்...

அழகாய் நாங்கள் கற்றோமே!
ஆனால் சிறிய சந்தேகம்...
பள்ளிக் கூடம் திறந்ததுமே
பாழாய் போகும் இப்பாடம்...

மீண்டும் பழைய திட்டம்தான் 
மதிப்பெண் ஒன்றே குறிக்கோளாய்
மனனம் செய்யும் வழிமுறைதான்...
மாற்றம் உணடோ சொல்வீரே!!!

அதனால் 

ஐயா! எங்கள் பெரியோரே!!!
அருமை யான தருணமிது!!!
அறிந்தே கல்வி கொள்கையினை
மாற்றி அமைக்க முயல்வீரே!!!

7 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆஹா...அருமை...கேட்கவேண்டியவர்கள் காதில் கேட்கட்டும்..

உமா said...

நன்றி

JAI MurugaN said...

very good article. keep on do this. pls visit my blog
https://www.jaimuruganwriter.com/

விசித்திரக்கவி said...

அருமையான வரிகள்

Jason said...

Intha Corona namalai sinthika vaithu vitathu. December peruvelam pol intha Corona neraiya vishathai puri vaithuvitathu.

Nanjil Siva said...

கேட்கவேண்டியவர்கள் காதில் கேட்கட்டும்.. உண்மையில் நீங்களும் ஒரு புரட்சி கவிஞர்தான்!!!... வாழ்த்துக்கள் சகோதரி...
https://www.scientificjudgment.com

Unknown said...

Excellent