Monday, September 14, 2009
தருவதே மேலாம். - [ நேரிசை ஆசிரியப்பா]
தங்கும் தண்ணீர்த் தாகம் தீர்க்காது,
எங்கும் வளமுற இருகரை தன்னில்
பாயும் ஆறோ பருகத் தருமே
ஈயும் கடலில் இரண்டறக் கலந்தும்
மீண்டும் மழையாய் எங்கும் பொழிந்தே!
யாண்டும் அதுபோல் பணமும் கொடுக்கும்
நேராய் பெற்றதை நிறைவோ[டு] ஈந்திட
பாராய் நெஞ்சினில் பெருகும் நிம்மதி
தேராய் என்றும் தருவதே மேலாம்!
ஈயாப் பொருளோ இருந்தே அழியும்
பேயாய் மனதில் பயமும் வளரும்
தாராய் என்றும் தங்கிடும் அமைதியென்[று]
ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
இறைவனைத் தொழுதிடல் வேண்டா
இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஊராய்ச் சென்றே உள்ளம் உருக
இறைவனைத் தொழுதிடல் வேண்டா
இரப்பவர்க் கென்றும் ஈவர் தாமே!///
அவ்வையே வணக்கம்!!
மரபுக் கவிதை மகளெ!! அருமை!! விரைவில் தமிழ்மணம் நட்சத்திரமாகப் பார்க்கலாம்!!
தேவன் மாயம் அவர்களே! என்னைய வைச்சு காமெடி கீமெடி பண்ணாலையே!
வாழ்த்துக்கு நன்றி.
Post a Comment