போட்டி
சில
சமையம்
ஒரு
நல்ல சந்தர்ப்பமாக
அமையலாம்
கவிதை
படைக்க…
அனால்
எனது
கவிதைகள்
போட்டிக்கானவை
அல்ல
மனத்தில்
எழும்
ஒரு
நொடி சிந்தனை
கவிதையாய்
வெளிப்படும்…
காதலே
ஆனாலும்,
கற்பனை
மனத்தில்
கருவானால்
தான்
கவிதை
ஆகும்
செந்தமிழ்
சொல்லும்
தெளிந்த
சிந்தனையும்
சேர்ந்தால்
மட்டுமே
கற்பனை
சிறகடித்து
வானம்
தொடும்
கவிதைப்பூ
மலரும்
எனது
கவிதைகள்
போட்டிக்கானவை
அல்ல
நெஞ்சில்
மலர்ந்த
விதையின்
துளிர்கள்
சிந்தனை
சிற்பியில்
உருவான
முத்துக்கள்…
கற்பனை
வானின்
நட்சத்திரங்கள்
எனது
கவிதைகள்
போட்டிக்கானவை
அல்ல…