Friday, February 20, 2009

நேர்மையாய் வாழ்வதே....

நூறு கோடி மக்கள் வாழும்
அகில இந்திய அளவில்
தலைப்புச் செய்திகளாய்.....
ஆறாயிரம் கோடிக்கு ஊழல்..
அறுநூறு கோடியில் ஒப்பந்தம் அதில்
அறுபது கோடி கமிஷன்..
ஆறு கோடி பொதுப்பணம்
ஐந்து வருடத்தில் வீண் செலவு..
அறுபது லட்சம் வரி ஏய்ப்பு
ஆறு லட்சம் லஞ்சம்
அறுபதாயிரம் கொள்ளை
ஆறாயிரம் திருட்டு
அறுநூறு ரூபாய் பொருளில் போலிகள்
அறுபது ரூபாய் பொருளிலும் எடை ஏய்ப்பு
ஆறு ரூபாய் கடுகிலும் கலப்படம்
ஐம்பது பைசா பிச்சையும்
செல்லா காசு.......

யார் சொன்னது?

'நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்றிதான்' என்று

நேர்மை......
மரபுக் கவிதை
ஆஹா! ஓஹோ! போடலாம்

வெற்றி....
தன் இலக்கணத்தை இழந்து
பல நாட்களாயிற்று....

பார்த்து எழுதுங்கள் உங்கள்
புதுக்கவிதைகளை........

4 comments:

அகரம் அமுதா said...

/////நேர்மை......
மரபுக் கவிதை
ஆஹா! ஓஹோ! போடலாம்

வெற்றி....
தன் இலக்கணத்தை இழந்து
பல நாட்களாயிற்று....////


மிகச்சிறந்த உவமை ஒப்பீடு எனக்கருதுகிறேன்.

வாழ்த்துகள். மேலும் எனது வலைகளைத்தங்கள் வலையுடன் இணைப்புக் கொடுத்திருப்பது கண்டு பெரு மகிழ்வு கொண்டேன். தங்களுக்கென் பணிவுகலந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

சொல்லரசன் said...

//யார் சொன்னது?

நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்றிதான்' என்று//

சிலசமயங்களில் சரியாக தோன்றலாம்,ஆனால் அவை நிரந்தரம் அல்ல

உமா said...

நன்றி, திரு அமுதா. தங்கள் வலைப்பதிவுகள் மிக அருமையானவை.இணைப்பை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டமைக்கு எனது நன்றிகள்.
[என்ன நங்களும் கொஞ்சம் வெண்பா எல்லாம் முயற்சிப்போம்.பாவம் தமிழ்]

உமா said...

வருகைக்கு நன்றி திரு.சொல்லரசன்.'நேர்மையாய் வாழ்வதே வெற்றி மேல் வெற்றிதான்' இது தான் உண்மை.இது தான் நிரந்தர நிம்மதி. இதை வலியுருத்தத்தான் இந்த இடித்துக்கூறல்.6 கோடி ஊழல் செய்தியாய் வந்ததுமே அதனால் நேற்றய பெருந்தொழிலதிபர் அடுத்தநாள் அசிங்கப்பட்டதை நாம் பார்க்கவில்லையா? இனியாவது சரியாக சிந்திக்க மாட்டார்களா? என்பது தான் என் ஆதங்கம்.