கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்...
கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
பைநிறைய
பொருள்வேண்டி
பெரும் புகையை
கிளப்பிவிட்டார்..
போதைப் பொருள் விற்ற
பெரும் பணம்தான்
கையிருக்க
புகழ் போதை
தனை வேண்டி
போயதையும்
வாங்கிவிட்டார்...
கண்ணாடி என்
செய்யும்
காலணிதான்
என்செய்யும்
ஏழை ஒருவன்
புல் தின்று பசியாற
வானம்பார்த்த விவசாயி
கடனேறி தலைவீழ
வரி ஏய்ப்பு செய்தவரோ
ஊழல் பல செய்தவரோ
வெட்கமின்றி
உலாவர
கொலை கொள்ளை
அத்தனைக்கும் வழிவிட்டே
சட்டம் போட்டு
காத்திருக்கும்
சமதர்ம சுயாட்சிச்
சமுதாயம் தன்னில்
கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்...
கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
பைநிறைய
பொருள்வேண்டி
பெரும் புகையை
கிளப்பிவிட்டார்..
போதைப் பொருள் விற்ற
பெரும் பணம்தான்
கையிருக்க
புகழ் போதை
தனை வேண்டி
போயதையும்
வாங்கிவிட்டார்...
கண்ணாடி என்
செய்யும்
காலணிதான்
என்செய்யும்
ஏழை ஒருவன்
புல் தின்று பசியாற
வானம்பார்த்த விவசாயி
கடனேறி தலைவீழ
வரி ஏய்ப்பு செய்தவரோ
ஊழல் பல செய்தவரோ
வெட்கமின்றி
உலாவர
கொலை கொள்ளை
அத்தனைக்கும் வழிவிட்டே
சட்டம் போட்டு
காத்திருக்கும்
சமதர்ம சுயாட்சிச்
சமுதாயம் தன்னில்
கண்ணாடி
என் செய்யும்
காலணிதான்
என்செய்யும்
முன்னாடியவர்
சொன்ன சொல்
மதியிழந்தோர்
மறந்தனரே
காந்தியோடு
போயிற்றே
நேர்மையும் :-உண்மை
அஹிம்சையும்
8 comments:
ஒரு நல்ல சமூக நீள கவிதை!! .. சமூக அவலங்கள், வாழ்நிலை விரிப்புகள் என்று பல தளங்களில் சஞ்சரிக்க இக்கவிதை உதவுகிறது. ரிபீட்டட் வார்த்தைகள் சலிப்பு ஏற்படுத்தவில்லை... ஏனெனில் சமூக பிரச்சனைகள் எவ்வளவு சுட்டாலும் வெண்மை தரும் சங்குகள்!!
தொடர்ந்து எழுதுங்க சகோதரி
//கண்ணாடி
என் செய்யும்
காலனிதான்
என்செய்யும்
பைநிறைய
பொருள்வேண்டி
பெரும் புகையை
கிளப்பிவிட்டார்..
போதை பொருள் விற்ற
பெரும் பணம்தான்
கையிருக்க
புகழ் போதை
தனை வேண்டி
போயதையும்
வாங்கிவிட்டார்...//
ஒரு வேளை பாவவிமோசனம் பெற இருக்குமோ,
நல்ல சமூக சாடல்.
தங்கள் ஆற்றமையை அழகாக அதேவேளையில் வன்மையாக பாவில் வார்த்தளித்துள்ளீர்கள். வாழ்க. குமுகாயம் திருந்துமா என்பதுதான் வினாக்குறி!?
//கண்ணாடி
என் செய்யும்
காலனிதான்
என்செய்யும்///
சூப்பர்ர்ர்ர்ர்ர்
ஆதவா, சொல்லரசன், அமுதா, ஞானசேகரன் அனைவருக்கும் நன்றி.
அகரம் அமுதா அவர்களே, பிழை திருத்தியமைக்கு நன்றி.
காலணி ஆதிக்கம் நடைபெறும் இத்தருணத்தில், ஒரு நற்கவியைத் தந்துள்ளீர்கள். காந்திக்குப் பின்னர் இந்தியா நடைபிணமாகத்தான் இருக்கிறது என்பது உங்கள் கருத்து. பாராட்டுக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு. உழவன். //காந்திக்குப் பின்னர் இந்தியா நடைபிணமாகத்தான் இருக்கிறது என்பது உங்கள் கருத்து. //
மன்னிக்கவேண்டும் அதுவல்ல என் கருத்து. காந்தி, நேர்மை, உண்மை, அஹிம்சை ஆகியவற்றின் ஆழ்ந்த கருத்தை தன் வாழ்வில் கடைபிடிக்க நினைத்தார். [வெற்றி அடைந்தாரா என்பது வேறு, அது சுதந்திரத்திற்கு உதவியதா என்பது வேறு] சொல்,செயல் நினைவால் கூட சத்தியம் தவறாதிருக்க முயன்றார். இன்றும் கூட பலர் தமதளவில் உண்மையாய் நேர்மையாய் இருப்பவர்களைக்காணலாம். மக்கள் சக்தி இயக்க தலைவர் திரு உதயமூர்த்தி அப்படிப்பட்டவர்களில் ஒருவர். தனது பெரும் செல்வங்களைல்லாம் விட்டுவிட்டு இங்கு நல்ல மனிதர்கள் சிலரின் உதவியோடு அடிமட்ட மக்களின் வாழ்வுக்காக பல விஷயங்கள் செய்துவருகிறார். இன்னும் பெயர் தெரியாத ஒருவர் தன் கிராமத்தின் குளத்தில் படர்ந்திருந்த செடிகளையெல்லாம் தாமாகவே பிய்த்து வாய்க்கால் அமைத்து நம்மையெல்லாம் வெட்கப்படச்செய்தார். இன்னும் பலர் இருக்கிறார்கள்.
இந்த குறிப்பிட்ட விகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இருவருமே காந்தியின் கொள்கைகளைப்பற்றி கவலைபட்டதாகத் தெரியவில்லை. ஏலப்பொருளின் மதிப்பை உயர்த்தும் கீழ்த்தரமான வேலை அது. வாங்கியவருக்கும் அது ஒரு பொழுதுபோக்கு. கண்டதையும் வாங்கி பெயர்பெருவது அவரது பணக்கார விளையாட்டு. கண்ணாடியையும் காலனியையும் அவர் வாங்கி விட்டுப்போகட்டும்,நாம் காந்தியின் கொள்கைகளை மனதில் வாங்குவோம்.
Post a Comment