Thursday, April 23, 2009

பட்டாம்பூச்சி விருது

பட்டாம்பூச்சியை என் தோட்டத்தின் பக்கம் பறக்கவிட்ட திரு.சொல்லரசன் அவர்களுக்கு மிக்க நன்றி. எனது வலைப்பக்கம் எனது குறிப்பேடு மாதிரி, நான் மட்டுமே எழுதி படித்து வந்தேன். சமீபகாலமாக பல நண்பர்கள் வருகைத்தருவதும் பின்னூட்டமிடுவதும் எனக்கு ஆச்சரியமானதே. மகிழ்ச்சியும் கூட. இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலும் மேலோங்குகிறது. ஆனாலும் இந்த பட்டாம்பூச்சி கொஞ்சம் பாவம் தான். பல அரிய [வலைப்] பூக்களைஎல்லாம் பார்த்த பின் என் சின்னச் செடிகளில் சற்றே ஏமாறலாம். இருந்தாலும் சிறிதேனும் என் கருத்துத்தேனை பருகுமாயின் மகிழ்ச்சியடைவேன்.

7 comments:

சொல்லரசன் said...

// இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆவலும் மேலோங்குகிறது//

இதுதான் எங்களுடைய ஆசையும்

பூக்கள் பல வீதம் உங்கள் (வலை)பூ ஒரு தனிவீதம்

வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

உமா said...

நன்றி சொல்லரசன். நட்பும்,பகிர்த்லும் எவ்வளவு இனிமையானது என்பதை இப்பொழுது உணர்கிறேன். நன்றி.

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு. கார்த்திகை பாண்டியன். [உங்கள் பெயர் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.] உங்கள் வலையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் உமா

"உழவன்" "Uzhavan" said...

தங்களை நண்பர் சொல்லரசன் மூலமாக சந்திப்பதிலே மிக்க மகிழ்ச்சி. பட்டாம் பூச்சி விருதுக்கு எனது வாழ்த்துக்கள். நிறைய எழுத நிறைய வாழ்த்துக்கள்!

//[உங்கள் பெயர் விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.] //

அது என்னப்பா பெயர் விளக்கம்??

உமா said...

நன்றி உழவன் [?]. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.