Wednesday, May 13, 2009

தண்ணெண மாறும் தழல்

அங்கமெல்லாம் ஆறாக அக்கினிதான் சுட்டாலும்
தங்கமெல்லாம் தானுருகி ஓருருவம் கொண்டதுபோல்
கண்மணியே என்னெதிரில் சேயுனைக் கணடதுமே
தண்ணெண மாறும் தழல்.

2 comments:

ஆதவா said...

உண்மைதாங்க.. இந்த மாற்றம் எப்போதெல்லாம் நிகழுகிறது?

குழந்தையைப் பார்க்கும் தாய்க்கு
காதலியைப் பார்க்கும் காதலிக்கு
கணவனைப் பார்க்கும் மனைவிக்கு
பேரனைப் பார்க்கும் தாத்தாவுக்கு...

இப்படியாக நீள்கிறது.

///ஆறாக //// அக்கினி சுடுவதை ஆறு போல என்று உவமிப்பது சரியில்லை. அதற்கு மாற்று ஏதேனும் வைத்திருக்கலாம். மற்றப்டி உங்கள் சிந்தனை அபாரம்.

தானுருகி - தனியுருவம் .... தளை ஒட்டவில்லை.

உமா said...

அக்கினி சுடும் போது அங்கமெல்லாம் வியர்வை ஆறாக ஒடி களைப்படைந்தாலும் // என்பதுதான் அர்த்தம்.

தானுருகி தனியுருவம் மன்னிக்கவும் தளை தட்டுகிறது, சுட்டியமைக்கு நன்றி. மாற்றிவிடுகிறேன். மிக்க நன்றி.

தங்க/லின் மேலான கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிப்பதாய் இருக்கிறது. மிக்க நன்றி.