Wednesday, May 13, 2009

எதிர்பார்க்கிறோம்

திரு அமுதா அவர்கள் குறள் வெண்பாவிலான சிறுவர்களுக்கான 'மழலை மருந்து' என்ற நூல் ஒன்றை வெளியிட இருக்கிறார்.மிகக் குறைந்த கால அவகாசத்தில் எழுதியிருக்கிறார். அவரது நூல் மிகச்சிறப்பான முறையில் வெளிவர வாழ்த்துகளுடன்.....

சீறாய் சிறுவர்தம் சிந்தை சிறந்திட
நேராய் சிலசொல்லை சேர்த்திங்கு என்றுமே
மாறாத பண்பை மனதில் பதித்திட
தாராய் 'மழலை மருந்து'.

13 comments:

ஆதவா said...

வெண்பா நல்லா இருக்குங்க.. தளை தட்டாமல்!!!!

உமா said...

மிக்க நன்றி ஆதவா.

அகரம் அமுதா said...

நன்றிகள் கோடி நவில்கின்றேன் தோழிஉமா
என்றனுக்குச் செய்தளித்த பாகண்டே -அன்றலர்ந்த
சேய்க்குப்பா செய்தளித்தேன் சேயினறி யாமைதனை
மாய்க்கும் "மழலை மருந்து".

சொல்லரசன் said...

மழலை மருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்,அகரம் அமுதாவிற்கும் வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் உமா,
திருஅமுதா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

அகரம் அமுதாவிற்கு வாழ்த்துக்கள். தோழி உமா.. உங்களைப் பின்தொடர்வதற்கான ஆப்ஷனைக் கொடுங்களேன்..

உமா said...

வருகைக்கு நன்றி திரு.சொல்லரசன்.
வணக்கம் திரு.ஞானசேகரன்.
கார்த்திகைப் பாண்டியன் மிக்க நன்றி.பின்தொடர்வதற்கான ஆப்ஷனை இதோ கொடுத்துவிட்டேன். மிக்கமகிழ்ச்சி.

தேவன் மாயம் said...

வெண்பா சிறப்பாக அமைந்துள்ளது!!!தொட்ந்து எழுதுக!!

தேவன் மாயம் said...

அகரம் அமுதாவை அறியேன்!!
எனினும் வாழ்த்துக்கள் அவருக்கு!!

உமா said...

வணக்கம் டாக்டர், அமுதா அவர்கள் வார்ப்பு இதழ் மூலம் எனக்கு அறிமுகமானவர். சிறந்த மரபுக்கவிதைகள் எழுதக்கூடியவர். அவரது வலைப்பதிவைப் பாருங்களேன்.
http://agaramamutha.blogspot.com/]எனக்கு வெண்பா எழுத சொல்லிக்கொடுத்தவர்.[வெண்பாஎழுதலாம் வாங்க பதிவு சிறப்பானது]

அகரம் அமுதா said...

என்னை வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகளைக் காணிக்கையாக்குறேன்.

அகரம் அமுதா said...

இங்குற்ற தோழி உமாவும் இத்தனைநாள்
எங்குற்றார் பாக்கள் எழுதாமல்? -அங்குற்ற*
இன்னலைக் கண்டே எழும்துன்பத் தாலோதான்
தன்னிலைம றந்தார் தவித்து!

அங்குற்ற -ஈழத்தைக் குறித்தது.

உமா said...

எங்குற்றாய் என்றீர் தமிழின் இனிமைப்
பயின்றிட காத்திருக் கின்றோமிங்[கு] நன்றாம்
பிரவா கமென்னும் [பா]விலக்கண நண்பர்
குழுப்பக்கம் சற்றே திரும்பு.

மண்ணுற்ற சோகம் மனம்சுட்ட துண்மை
கண்ணுற்ற போது கவியெழுத வார்த்தையில்லை
சோர்வுற்ற நெஞ்சின் துயர்களைந்தி[ட] கற்ற
தமிழன்றி இல்லைத் துணை