Saturday, June 27, 2009

மனம்மயக்கும் மாயத் தமிழ்

தேனினிக்கும் செந்தமிழால் நாவினிக்கும் ஏடினிக்கும்
இன்தமிழை நாமெழுத, வாழ்ந்திருக்கும் நற்றமிழும்
நாம்படிக்க, காப்பதற்கே தாமதமேன் கற்போம்
மனம்மயக்கும் மாயத் தமிழ்.

திரு.அமுதா அவர்களின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பகுதியில் எழுதியது.

13 comments:

சொல்லரசன் said...

மனம்மயக்கும் மாயத் தமிழ் கற்பதால்தான் பதிவுலகத்தில் மாயமாகிவிட்டீர்களோ,
வென்பா நன்றாக உள்ளது,

அகரம் அமுதா said...

வாழ்க! அழகிய வெண்பா வடித்தளித்துள்ளீர்கள்.

அகரம் அமுதா said...

மயங்கிடுதோ உங்கள் மனமும்! தமிழ்க்காய்
இயங்குவதே நந்தம் இலக்காம் -நயங்கண்டு
நற்றமிழை நாடகத்தில் நாட்டிக் களிகொள்வோம்
பொற்றொடியே வாழ்த்துப் புகல்!

தேவன் மாயம் said...

வெண்பா அருமை!!

தேவன் மாயம் said...

எங்கே போனீர்கள்!!

தமிழ் said...

அருமையாக இருக்கிறது

அன்புடன்
திகழ்

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்குங்க..
மனம்மயக்கும் மாயத் தமிழ்... அருமை

உமா said...

வணக்கம் திரு சொல்லரசன். உண்மைதான். சில புத்தகங்களைப்படிக்கும் ஆர்வத்தில் வலைப்பக்கம் வரவில்லை.வந்தாலும் நண்பர்களின் வலைகளைப் படித்தேனே தவிர எழுதவில்லை.

எழுதுவதைவிட நான் நிறைய படிப்பவள். அந்த ஆர்வத்தில் தான் எழுதவும் முயற்சித்தேன்.

வாழ்த்துக்கு நன்றி.

உமா said...

வணக்கம் அமுதா.வாழ்த்துக்கு நன்றி'

வயதொன்றே காரணமாய் வாழ்த்துகின்றேன் நற்றமிழை
நாடகத்தில் நாட்டியே முத்தமிழின் முத்தெடுப்பாய்
நற்கவியாம் உம்பணியை நாமகளும் நாடுகின்றாள்
இல்லை உனக்கு இடர்.

உமா said...

வணக்கம் தேவன்மாயம். உங்கள் பதிவுகளையெல்லாம் படித்துக்கொண்டுதானிருந்தேன்.
இனி புத்துணர்வோடு எழுதலாம்.
வாழ்த்துக்கு நன்றி

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திகழ்மிளிர்.

உமா said...

வாருங்கள் ஞானசேகரன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை!!