Wednesday, July 08, 2009

எழுத்துப் பிழைநீக் கியன்று!

மண்முத லாய்ப்பிறந்து குன்றாப் புகழினோ(டு)
எண்ணிலடங் காரிதயத் தில்காத்தி ருந்து,களை
நீக்க இலக்கணம் கண்டே இலக்கியமும்
பெற்றதாம் சீரிளமைச் செந்தமிழ்த்தன் பண்டைச்
சிறப்போடு கண்ணியு கம்தாண்டி யென்றும்
தழைக்கத் தமிழா! தமிழ்பேசு; முற்றாய்
எழுத்துப் பிழைநீக் கியன்று!

திரு அகரம் அமுதாவின் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவில் எழுதியது. திரு. அமுதாவின் சில திருத்தங்களுடன் இங்கே.

2 comments:

அகரம் அமுதா said...

எழுத்துப் பிழைநீக் கியன்றென்றார் தோழி!
வழுத்துதல் என்கடனே! வாழ்கநீர் என்பேன்
கொழுத்த தமிழினைக் கொண்டு!

சொல்லரசன் said...

//கண்ணியு கம்தாண்டி யென்றும்
தழைக்கத் //

தற்போது பதிவுலக பதிவுகள்,கவிதைகள்,வெண்பாக்களை படிக்கும் போது தமிழ்தலைமுறை இருக்கும்வரை தழைக்கும் என்பதில் ஜயமில்லை