தீயின் வெம்மை -கடவுள்;
நீரின் நீர்மை -கடவுள்;
பெண்ணில் தாய்மை -கடவுள்;
கண்ணில் பார்வை -கடவுள்;
மண்ணின் உயிர்ப்பே -கடவுள்;
விண்ணின் விரிப்பே -கடவுள்;
நெஞ்சில் நேர்மை -கடவுள்;
நினைவில் கருணை -கடவுள்;
எண்ணம் கடவுள்;
எழுத்தும் கடவுள்;
எண்ணிப் பார்த்தால்
நீயும் கடவுள்,
நானும் கடவுள்;
ஆதலால் உலகத்தோரே!
தீயில் நன்மைக் காண்பீர்
நீரின் தன்மைக் கொள்வீர்
நெஞ்சில் தாய்மைக் கொண்டே
மண்ணில் உயிர்கள் காப்பீர்
தன்னில் தெய்வம் கண்டால்
மண்ணில் மனிதம் வாழும்.
13 comments:
//தன்னில் தெய்வம் கண்டால்
மண்ணில் மனிதம் வாழும்.//
ஆகா..அருமை
//நீயும் கடவுள்,
நானும் கடவுள்;//
அப்போ பக்தன் யாருங்க உமா
மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும் எனக்குக் கடவுள். நானே அங்கு அடியவன்.
இதைப்படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.
//எண்ணிப் பார்த்தால்
நீயும் கடவுள்,
நானும் கடவுள்//
உண்மை!
பெண்ணில் தாய்மைக் -கடவுள்;///
பெண்ணே கடவுள்தாங்க!!!ஒத்துக்குறோம்!!!
உமா நிறைய எழுதுங்க!!ஆளையே காணோமே!!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
நல்ல கவிதைக்கு நன்றி.
//தன்னில் தெய்வம் கண்டால்
மண்ணில் மனிதம் வாழும்.//
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
வாங்க டாக்டர், வணக்கம்.
// நிறைய எழுதுங்க!!ஆளையே காணோமே!!//
ஊக்கத்திற்கு நன்றி, கண்டிப்பாக எழுதுகிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராமலஷ்மி.
அப்போ நானும் கடவுள் தான்......
கவிதை நல்லாயிருக்கு நிறைய எழுதுங்க எதிர்பார்க்கிறோம்.......
நன்றிங்க வசந்த்.
நீங்களெல்லாம் கொடுக்கிற தைரியத்தில் தான் நான் எழுதுவதே.
[அடிக்க முடியாதில்ல]
//உமா said...
மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும் எனக்குக் கடவுள். நானே அங்கு அடியவன்.
இதைப்படிக்கும் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.//
Fantastic ...........
Post a Comment