Monday, August 17, 2009

மழை

சொந்தமான மண்வெடித்து சோறுதண்ணி இல்லாமல்
பந்தமெல்லாம் வாடினது போதுமய்யா - வந்திங்கே
ஆறெல்லா நீரோட மாமழையாய் பெய்திடய்யா
ஊரெல்லாம் காத்திருக்கே வா.

வாவென்று நானழைத்த மாமழையும் வந்திங்கே
சோவென்று கொட்டுதய்யா பேய்மழையாய் - போவென்று
நான்சொல்ல போயிடுமோ? நாளெல்லாம் பெய்திங்கே
ஏன்கெடுதல் செய்கிறதோ எண்ணு.
[திரு தமிழநம்பி அவர்களின் திருத்தத்துடன்]


2 comments:

ஆ.ஞானசேகரன் said...

அருமை...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இவ்வளவு அழகாகவும் சேஷாசலம் அவர்களின் பாணியில் எளிமையாகவும் வெண்பா எழுதத் தெரிந்தவர் ஏன் மரபுக்கவிதைப் போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது? எழுதுங்கள் நன்றி