குற்லீற்று மா+ விள+ மா
விள +விள+ மா
பாகு வெல்லமும் தேனும்
பருகிடு கனியதன் சாறும்
போகு மிடமெலாம் வாசம்
புன்னகை வீசிடுந் தென்றல்
ஓடும் ஊரெலாம் ஆறு
ஓங்கிடச் செய்திடு வளனும்
தேடும் இன்பமும் தருமே
தீந்தமிழ் தந்திடும் ஒருசொல்
சொல்லச் சுவைத்திடும் நாவும்
சோர்வினை விலக்கிடும் வானின்
வில்லைப் போல்பல வண்ணம்
வியத்தகு தமிழினில் உண்டே
கல்லைச் செதுக்கிய சிலைதான்
கற்றவர் சிந்தையில் தமிழே
இல்லை இருந்தமிழ்ச் சொல்லுக்
கிருநில மீதினில் ஈடே!
6 comments:
அருமை. உங்களைப்போன்றோரின் அறிமுகம் பலருக்கு தேவை.
தங்கள் பணி அருமை.
அன்பின் உமா
கருத்து நன்று தமிழ்ப்பா நன்று
தமிழின் சிறப்பு விள்க்கப்பட்டிருக்கும் விதம் நன்று
சொல்லின் இறுதியில் வல்லின மெய் வரலாமா - "சொல்லுக்"
நல்வாழ்த்துகள் உமா
தீந்தமிழ்த் தந்திடும் - தீந்தமிழ் தந்திடும்
எது சரி ?
திரு.அக்பர் தங்க்ள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
திரு சீனா
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
தீந்தமிழ் தந்திடும் - என்றே வரவேண்டும். எடுத்தியம்பியமைக்கு மிக்க நன்றி.
[வல்லினம் மிகும் இடங்களை இன்னும் நன்றாக கற்க வேண்டும் என்பது உண்மைதான்.]
Post a Comment