Saturday, September 24, 2011

சமச்சீர் கல்வி 2

சீராய் கல்வி தந்திடனும்
   சிறுவர்க் கெல்லாம் இலவசமாய்
சாரா செய்தி, சரித்திரத்தை
   சலிக்கா வண்ணம் கொடுத்திடனும்
கூராய் அறிவுத் தெளிவுறவே
  குறைகள் களைந்து தாய்மொழியில்
பாராய் பாடம் படித்திட்டால்
  படியும் நெஞ்சில் நிலையாக...

விளையாட் டோடு விஞ்ஞானம்
  விளைச்சல் கணிதம் வாணிபமும்
களைப்பை போக்கும் கவிதைகளும்
  கதையும் நடனம் நாடகமும்
இளைஞர் அறிந்து உழைத்திட்டால்
   ஏற்றம் எளிதாம் மனத்தினிலே
விலையில் நேர்மை விதையாக
  விளையும் நாளை வல்லரசு.

மா மா காய்
மா மா காய்

என்ற வாய்ப்பாட்டில் அமைந்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய மண்டிலம்.

9 comments:

சத்ரியன் said...

இது பெரியோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான பாடம்.

இலக்கணத்தையும் குறிப்பிட்டு எழுதியிருப்பது கூடுதல் சிறப்பு.

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.சத்திரியன்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

தோழி,தரமான வலைப்பதிவு. தொடரட்டும் உங்கள் இலக்கிய ரசனையும் ,தமிழ் இலக்கண விரிவுரையும் , வாழ்த்துக்கள் by www.kavithaimathesublogspot.com

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு குரு.பழ. மாதேசு. தொடர்வோம். உமா.

சிவகுமாரன் said...

நன்று

உமா said...

நன்றி

Marc said...

அருமை கவிதை வாழ்த்துகள்

நா.முத்துநிலவன் said...

மரபுக்கவிதை எழுதுவோர் குறைந்து வரும் இக்காலத்தில் பெண்கவிஞர் ஒருவர் இவ்வளவு சிறப்பாக மரபுக்கவிதைகளை விளக்கி, எழுதிவருவதைத் தாமதமாகப் பார்க்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன் சகோதரி.
தொடரு்ங்கள் உஙக்ள் பணி காலத்தை வென்று நிற்க வாழ்த்துகள்.
(இவ்வளவு சிறப்பாகக் கவிதை எழுதும் நீங்கள், ஒற்றுப்பிழை, குற்றியலுகரப் புணர்ச்சியிலும் சற்றே கவனம் செலுத்தினால் சிறப்பாகும்)

உமா said...

ஐயா
தங்கள் வாழ்த்துக்கும் அறிவுரைக்கும் நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
நன்றியுடன்
உமா