Tuesday, January 13, 2015

புத்தகச் சந்தைக்குப் போ



எத்தனையோ எண்ணங்கள் ஏடாகி ஓரிடத்தில்
தித்திக்கும் தேனாக சிந்தனைக்குச் சத்தாகும்,
புத்திக்கும் வித்தாகும் புத்துணர்வைப் பெற்றிடவே
புத்தகச் சந்தைக்குப் போ


---------------------------------------------------------------------------------------



சத்தான நூல்பலவும் சேர்ந்து கிடைக்குமிங்கே
முத்தான தாக முயன்று படித்தறிந்து
மொத்தமாக வாங்கிடலாம், சொத்தாகும் சிந்தனைக்கு
புத்தகச் சந்தைக்குப் போ

3 comments:

அருள் மணிவண்ணன் said...

நான் படித்தவைகளில் புத்தக சந்தைக்கு போக சொல்லும் முதல் கவிதை இது. அருமை.

உமா said...

நன்றி
மணிவண்ணன் அவர்களே.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

மகிழ்ச்சியுடன் 3விடயங்களுக்காக உங்களைப் பாராட்டுகிறேன் சகோதரி!
(1)மறைந்துவரும் மரபில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முயற்சிக்காக
(2)ஆண்களே மழுப்பிவரும் இலக்கணத்தில் ஆழங்கால்படும் சகோதரிக்காக
(3)சும்மா எதையாவது பொறுப்பின்றி எழுதுவோரிடையே புத்தகக் காட்சிக்குப் போகச்சொல்லி ஆற்றுப்படுத்தியதற்காக... தொடருங்கள் தொடர்வேன். வணக்கம்