Sunday, July 31, 2016

உழைப்பு

பேப்பர் பேப்பர்
என்றே கூவி
பழைய பேப்பர் வாங்கிடுவார் -  மறு
சுழற்சிக் காக
கொடுத்தே இந்த
பூமி காக்க உதவிடுவார் - நாம்
செய்யும் தொழிலில்
சிறுமை இல்லை
நன்மை பெரிதாய் இருக்கையிலே-சிறு
குடிசைத் தொழிலும்
உயர்த்தும் உன்னை
உழைக்கும எண்ணம் வலுக்கையிலே...

4 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அருமையான சந்த மரபு ஓசையுடன் கூடிய கவிதை! சில இலங்கைக் கவிகளைப் போல் ஏன் புதுக்கவிதை போலும் வடிவத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள் சகோதரி? (ஈழக்கவி மகாகவியின் “சாதாரண மனிதனின் சரித்திரம்” அற்புதமான கலிவிருத்தக் காவியம். ஆனால் புதுக்கவிதைபோலவே வெளியிட்டிருப்பார்)
தொடர்ந்து எழுத வேண்டுகிறேன். நண்பர் சிவகுமாரனின் மரபுக்கவிதைகள் பார்த்திருக்கிறீர்களா? இல்லையேல் அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.
http://sivakumarankavithaikal.blogspot.com/ அற்புத மரபுக்கவிஞர் அவர். நன்றி.

சிவகுமாரன் said...

சமூக அக்கறை கொண்ட கவிதை.
அருமை சகோதரி.
கவிதை ஒரு தாள லயத்தோடு இருப்பது ரசிக்க வைக்கிறது.

சிவகுமாரன் said...

நன்றி அய்யா

Unknown said...

good poem ji