பிரசவ `வார்ல்` டில்
பேறுக்காக காத்துக்கிடந்தேன்.
பொய் வலிதான்
புறப்பட்டு வந்து விட்டேன்
பாதுகாப்பாய்
பிள்ளைப்பெற...
அந்தோ !
எனக்கு நடந்தது
`அவசர` சிகிச்சை
அறுவை சிகிச்சை
ஆனால்
அவசியமே இல்லாமல்
வலியே இல்லாமல்
குழந்தை
பிறப்பிக்கப்பட்டது.
அழுதது,
சிரித்தது,
வளர்ந்தது...
இன்னமும்
வலித்துக்கொண்டேயிருக்கிறது...
மனம்,
வலிக்காக ஏங்கி...
நிரந்தர வலியை
எனக்களித்தவர்கள்
அங்கே
சிரித்துக் கொண்டேயிருகிறார்கள்
மனங்களை விட்டு
பணங்களை மட்டுமே
`எண்ணி`க் கொண்டு...
1 comment:
இந்த மாதிரி கொடுமைகளை கவிதை வழியாக சமூகத்திற்கு தெரிவிப்பதை வாழ்த்துகிறேன்
nsureshchennai@gmail.com
Post a Comment