Friday, March 27, 2009

அணுவாற்றல் வேண்டும் அறி

அகரம் அமுதா அவர்களின் 'அணுவாற்றல் வேண்டாம் அகற்று' என்ற வெண்பாவிற்கு பின்னூட்டமாக எழுதியது.

*மேற்கின் அடிவீழ்தல் இல்லையிது காண்பாயே

ஏற்கின் கிழக்கும் உயர்ந்திடுமே -மேற்கு

கிழக்கிரண்டும் கைக்கோர்த்தே வையம் சிறக்க

அணுவாற்றல் வேண்டும் அறி.

*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை

கண்டவரே வந்திட்டார், மாறும் உலகிலிவர்

வல்லார் இவரல்லார் என்பதெல்லாம் நன்காம்

அணுவாற்றல் வேண்டும் அறி

*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க

பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை

ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க

அணுவாற்றல் வேண்டும் அறி

4 comments:

சொல்லரசன் said...

//*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை கண்டவரே வந்திட்டார்//

இதுதான் உண்மை,அவர்கள் எவ்வளவு துரம் இறங்கி வந்து இருக்கிறார்கள் என்பதை கடந்த காலத்தில் பார்க்கவேண்டும்

//*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க

பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை//

இதன் பின்தான் உலகம் நம்மை கண்டு அஞ்சியது

ஒரு சாரர் சொல்கிறார்கள் என்பதற்காக அனு ஆற்றல் கொள்கையை எதிர்க்ககூடாது.அதில் உள்ள நிறைகளை அலசி ஆராய்வது நலம்.

அனுவாற்றல் வேண்டும் என்பதே எனது கருத்தும்.

ஆ.ஞானசேகரன் said...

//பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை

ஒன்றாய் இணைந்தே உலகம் விளங்க

அணுவாற்றல் வேண்டும் அறி//

உயிரழிக்கும் அணுவாற்றல் இன்றி
உலகை காப்போம்- நல்வழிகண்டு
ஆக்கும் சக்திகளை அணுவாற்றில் கான்போம் . என்றும் மாகாசக்தி படைப்போம் அறி

அகரம் அமுதா said...

பொக்ரான் அணுவாய்வைப் போலென்றைப் பிந்நாளில்
தக்கார்நாம் செய்யா தடங்கவே -மிக்க
துணிவோ அணுவீந்தார் தோகாய் அறிவாய்
அணுவாற்றல் வேண்டாம் அறி!

"உழவன்" "Uzhavan" said...

//*நம்பி விழுவதிங்கு நாமல்ல நம்திறமை கண்டவரே வந்திட்டார்//

இதுதான் உண்மை,அவர்கள் எவ்வளவு துரம் இறங்கி வந்து இருக்கிறார்கள் என்பதை கடந்த காலத்தில் பார்க்கவேண்டும்

//*வல்லார் அவரென்று வீணர் நினைத்திருக்க

பொக்ரான் வெடியிட்டே காட்டிட்டோம் நம்திறமை//

இதன் பின்தான் உலகம் நம்மை கண்டு அஞ்சியது

ஒரு சாரர் சொல்கிறார்கள் என்பதற்காக அனு ஆற்றல் கொள்கையை எதிர்க்ககூடாது.அதில் உள்ள நிறைகளை அலசி ஆராய்வது நலம்.

அனுவாற்றல் வேண்டும் என்பதே எனது கருத்தும்.

ரிப்பீட்ட்ட்டு.. அதுமட்டுமல்லாது, உலகின் முன்னேறிய நாடுகளனைத்துமே அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருக்கின்றன. நாம் மட்டும் ஏன் தேவையில்லை என்கிறோம்?