Thursday, May 07, 2009

உழவின்றி உய்யா[து] உலகு

அமுதா அவர்கள் கொடுத்திருந்த ஈற்றடி கொண்டு சில வெண்பாக்கள்

கருவிகலை செய்தொழில் யாவும் புகழ்தரலாம்
மாந்தர் உறுபசி தீர்க்க உடல்வளைத்தே
ஏழை விதைத்தநெல் போலாமோ ஏற்பீர்
உழவின்றி உய்யா துலகு

ஈகலப்பை கொண்டு எழுதியே வந்தாலும்
ஏர்கலப்பை இல்லா தியலுமோ மண்ணில்
பசித்தவுயிர் 'பா'எழுது மோபசி தீர்க்கும்
உழவின்றி உய்யா துலகு.

2 comments:

அகரம் அமுதா said...

///ஈகலப்பை கொண்டு எழுதியே வந்தாலும்///

இவ்வரிகளை எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை. காலத்திற்கு ஏற்றாற்போல் எழுத்துருவை வெண்பாவில் வைத்து அழகாகப் பாடியுள்ளீர்கள் வாழ்த்துகள்.

உமா said...

நன்றி அமுதா.