அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.[திருக்குறள் (96)]
Thursday, May 07, 2009
மெய்யடா மெய்யடா மெய்
இலங்கையில் நடக்கும் அட்டூழியங்கள் கண்டு மனம் கொதிப்பது உண்மை. போரை நிறுத்துவதாய்ப் பொய்சொல்லிப் பல்லோரின் கூரை பெயர்த்துதறி பெண்ணைக் குதறும் நயவஞ் சகமெண்ணி நெஞ்சம் கொதிப்பது மெய்யடா மெய்யடா மெய். [திரு.அமுதா திருத்திய சில மாற்றங்களுடன்]
1 comment:
தோழி 'உமா'புனையும் தொய்வில்'வெண் பா'க்கண்டால்
ஆழிபோல் என்நெஞ்சம் ஆர்ப்பரிக்கும் -வாழியெனச்
செய்யடா செய்யடா செய்யோர் கவியதுவே
மெய்யடா மெய்யடா மெய்.
Post a Comment