
[கட்டிடக் காடாகிவரும் சென்னையில் இப்பொழுது ஆங்காங்கே சாலையோரப் பூங்காக்கள் அமைக்கிறார்கள். சாலையோரமென்பதால் வாகன சத்தமும்,இடிபடும் அபாயமுமுண்டு. அப்படிப் பட்ட ஒரு பூங்காவிற்குப் பசுமை ஈர்க்க பறந்து வந்துவிடுகிறது ஒரு குருவிக்குஞ்சு. சென்னையின் சகல வித்தைகளையும் அறிந்த பூனை தாயுள்ளத்தோடு சொல்வதாக ஒரு கற்பனை]
கட்டிக் கரும்பே!கேள் வேண்டாம் பிடிவாதம்
எட்டியந்த மின்சாரக் கம்பியிலுன் கூட்டைச்சேர்
பேரபாய முண்டேயிப் பாதையோரப் பூங்காவில்
வேறுபாய மில்லை உணர்.
7 comments:
:) அருமை யருமை என்றா லும்மு மக்குப்
பெருமை பெருமையுந் தகுமே வாழ்த்த
வந்தேனின்று விதூஷ் இத்தளத்தி நின்றுஞ்செல்ல
செந்தேன் தமிழ் பருகி.
அன்புடன் -- வித்யா
ஆஹா, வாழ்த்துக்கு மிக்க நன்றி.
படமும் வெண்பாவும் நன்றாக வந்துள்ளது
உமாவுக்கு வாழ்த்துக்கள்!!
நன்றி திரு.ஞானசேகரன்
நன்றி திரு தேவன் மாயம்
நல்ல கற்பனை. வெண்பா என்பதைத் பார்த்த உடனே, சரி நமக்குப் புரியாது என்றுதான் படித்தேன். ஆனால் எளிதாகப் புரிந்தது. வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, திரு. உழவன். நானும் அப்படித்தான் எண்ணியிருந்தேன், அந்த பயத்தைப் போக்கியவர் அமுதா அவர்கள். 'வெண்பா எழுதலாம் வாங்க' படித்துப் பாருங்களேன். உங்களின்'பட்டிக்காட்டில் பிறந்திருந்தால்' நல்ல கற்பனை. திறமையிருக்கும் போது தங்களால் கண்டிப்பாக முடியும்.
அன்புடன் உமா.
Post a Comment