Wednesday, July 29, 2009

ஈயூர இல்லை இடம்

சாலையெங்கும் வாகனம் சேரும் பெருங்கூட்டம்
காலைமாற்றி வைக்கயிட மின்றிஞாயி[று] மாலையில்
வாயூறும் பஜ்ஜி வகையாய்,-கடற்கரையில்
ஈயூர இல்லை இடம்.
[நம்ம மெரீனா கடற்கரை ஞாயிறு மாலையில் தரும் காட்சி]

12 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்லா இருக்குங்கோ உமா

நேசமித்ரன் said...

உங்கள் தளம் குறித்து இன்றே அறிந்தேன்
மரபின் வேர்கள் மிக ஆழமாக பயணிக்கிறது உங்கள் படைப்புகளில்
வாழ்த்துக்கள்

அகரம் அமுதா said...

நுரையோடும் ஓடும், நுணல்தாவல் போடும்,
கரையோரம் உப்புக் கடலே! -கரைமீதில்
வாயூர வைக்கும் வடை,பச்சி பாரதன்மேல்
ஈயீர உண்டே இடம்!


மெரினாவிற்கு இரண்டு மூன்று மூறைகளே வந்திருக்கிறேன். அங்கு விற்கும் சுண்டல் பச்சி என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் அதன்மேல் மொய்க்கும் ஈக்களை நினைத்தால்தான்!!!!!!!!!!!


வ்வ்வ்வவாஆஆஆவ்...

Vidhoosh said...

அருமை...:)

தேவன் மாயம் said...

வெண்பாக்கள் எழுதிக்கலக்கும் நண்பியே நன்று!!

உமா said...

நன்றீங்கோ ஞானசேகரன்.!! உங்கள் ஊக்கம் தான் தொடர்ந்து எழுத வைக்கும். மிக்க நன்றி.
அன்புடன் உமா.

உமா said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றி திரு. நேசமித்திரன்.
//மரபின் வேர்கள் மிக ஆழமாக பயணிக்கிறது உங்கள் படைப்புகளில்
வாழ்த்துக்கள்.//

இது மிகப் பெரிய பாராட்டு. மரபில் முழுமையாக எழுத வேண்டுமென்பதுதான் என் ஆசை. நான் சிறிதேனும் எழுதுகிறேன் என்றால் அது திரு அகரம் அமுதா அவர்களால் தான். உங்கள் பாராட்டையெல்லாம் நன்றியோடு அவருக்கே அர்பணிக்கிறேன்.மிக்க நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

உமா said...

//வாயூர வைக்கும் வடை,பச்சி பாரதன்மேல்
ஈயீர உண்டே இடம்!//

உண்மைதான் அமுதா. இங்கு இன்னும் சுகாதரம் முன்னேறவேண்டும் என்றாலும் எத்தனையோ ஏழைக் குடும்பங்களுக்கு இதுதான் வாழ்வாதாரம். ஊடகங்களாலும் அரசு சாரா நிறுவனங்களின் முயற்சியாலும் இப்பொழுது சற்றே விழிப்புணர்வு வந்திருக்கிறது. இவர்கள் வாழ்வில் வளம் பெறவும்,சென்னையும் சிங்கை போல் 'சிங்காரச் சென்னை' யாய் மிளிரவும் பிரார்தனையோடும் நம்பிக்கையோடும்.

[சென்னைக்கு மீண்டும் வாருங்கள் அமுதா. மெரீனாவிற்கு மிக அருகில் பாரதி சுவாசித்தக காற்றும் அவன் பாதம்பட்ட மண்ணுமுள்ள திருவல்லிக்கேணியில்தான் எங்கள்வாசம்.]

உமா said...

//அருமை...:)//

மிக்க நன்றி வித்யா.

உமா said...

//வெண்பாக்கள் எழுதிக்கலக்கும் நண்பியே நன்று!!

மிக்க நன்றி டாக்டர் , உங்கள் ஊக்கம் தான் எனக்கு மருந்து.மீண்டும் நன்றி.

அகரம் அமுதா said...

//////வாயூர வைக்கும் வடை,பச்சி பாரதன்மேல்
ஈயீர உண்டே இடம்!//

உண்மைதான் அமுதா. இங்கு இன்னும் சுகாதரம் முன்னேறவேண்டும் என்றாலும் எத்தனையோ ஏழைக் குடும்பங்களுக்கு இதுதான் வாழ்வாதாரம்.//////


அய்யய்யோ! நான் எள்ளலுக்காக அப்படி எழுதவில்லை உமா அவர்களே! நகைச்சுவையாகத்தான் அப்படி எழுதினேன். நானும் தமிழ்நாட்டில் பெரம்பலூரைச் சேர்ந்தவன்தானே! நாளைக்கே சிங்கையில் எனக்கு வேலைக்கான ஒப்பந்த முறிவு ஏற்பட்டால் எனக்கும் தமிழகமே கதியன்றோ! அப்படியெல்லாம் தவறாக எழுதிவிடுவேனா என்ன?////'சிங்காரச் சென்னை' ///

சிங்கார சென்னை!


////சென்னைக்கு மீண்டும் வாருங்கள் அமுதா.////

அனேகமாக அடுத்த ஆண்டிற்கான வேலை அனுமதி மறுக்கப்பட்டுமானால் 10ம் மாதம் 3ஆம், 4ஆம்நாள் (தேதி) சென்னை வானூர்தி நிலையத்தில் வந்திறங்கி இருப்பேன்.

சொல்லரசன் said...

இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னை வந்து இந்த காட்சியை பார்த்தபோது
என‌க்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது,குறைந்தபட்சம் ஏதாவது கண்ணாடிபெட்டிக்குள்ளாவது வைக்கமுயற்சிசெய்யவேண்டும்.
முன்பெல்லாம் வலையுலகத்தில் வெண்பா என்றால் அமுதாவின் ஞாபகம்தான் வரும்,இப்போது உங்கள் ஞாபகமும் சேர்ந்து வருகிறது.