
வஞ்சத்தால் வாய்மை யிழந்தான் பெரும்புகழ்
அப்பஞ்சேற் றத்தீயாய் நின்றொளி வீசுமுண்மை
நெஞ்சத்தான் செய்த வினை.
குறள் வடிவில்
நெருப்பிட்ட பஞ்சாய் நிலையற் றழிந்துபோகும்
பொய்யிட்டுச் சேர்த்தான் புகழ்.
பழிக்கும் செயலான் பெரும்புகழ் காலம்
அழிக்கும் விழலாய் விரைந்து.
7 comments:
புதுகவிதைகளை மரபு கவிதைகளாக மாற்றும் முயற்சி வளர்க.
அருமையாக இருக்கிறது.
வெண்பா வடிவிலும்
குறள் வடிவிலும்
அற்புதம் படைத்துள்ளீர்கள்
வாழ்த்துகள்
அன்புடன்
திகழ்
கலக்கல். அருமையோ அருமை தோழி.
--வித்யா
மிக்க நன்றி சொல்லரசன். உங்கள் ஊக்கம் தான் என்னை எவ்வளவு எழுத வைக்கிறது. நன்றி.
அன்புடன் உமா.
திரு.திகழ். மிக்க நன்றி.
அன்புடன் உமா.
தோழி வித்யா, மிக்க நன்றி.[அப்பம் மிக நன்றாக வந்தது. அதற்கு தனியாக நன்றி. உங்கள் பதிவிற்கு வந்து பின்னூட்டமிடுகிறேன்.]
அன்புடன் உமா.
வாழ்த்துகள் நல்லாயிருக்கு
Post a Comment