Sunday, August 09, 2009

நட்பு

இன்பம் கொடுத்து இரண்டாக்கி, வாழ்வினில்
துன்பம் பகிர்ந்தே துடைத்தெடுத்து -என்றும்
கடிந்துறு சோர்வில் சுடராய், தவறை
இடித்தும் உரைப்பதே நட்பு.

விளக்கம்: வாழ்வின் இனிமைகள் மேலும் மேலும் வளரும் வண்ணம் நட்புடன் கூடி, துன்பத்தை பகிர்வதன் மூலம் அதனை இல்லாததாக்கி , நம் வாழ்வில் என்றும் விரைந்து நம்மை ஆட்கொளளக்கூடியதான சோர்வு நம்மை அடையாவகையில் இருளைநீக்கும் சுடராய் நம் சோர்வை நீக்கி, தவறு செய்யும் போது கண்டித்துக்கூறியும் நம்மை நல்வழிபடுத்துவதே சிறந்த நட்பு.

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்களே எழுதீங்களா...,

சிறப்பாக இருக்கிறது..,

ஆ.ஞானசேகரன் said...

விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க உமா... இப்பொழுது சுவை அதிகமாக தெரிவதாய் இருக்கு...